பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் f07 மெய்யுணர்வு பெற்றுப் பாடத் தொடங்குகிறான். துறப்பதே தொழிலாக என்ற பாடலில், "எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ!" (256) என்று கூறும்பொழுது, தான் பெற்ற திருவடி தீட்சை பிறர்க்குக் கிட்டாத ஒன்று என்று கூறுகிறான். அவன் இராகவனைத் துதிக்கத் தொடங்குகையில் "வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ? ஒதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ? (2563) என்ற பாடலில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணமுடைய பஞ்சபூதங்களிலும் பரம்பொருளே நிறைந்துள்ளான் என்றும், எல்லா உலகங்களிலும் அவன் திருவடிகளே விரிந்துள்ளன என்றும் பேசுகிறான். இங்குத் திருவடி என்று விராதன் கூறும்பொழுது அச் சொல்லுக்குத் திருவருள் என்ற பொருளையே கொள்ள வேண்டும். இச்சொல்லுக்கு இதுதான் பொருள் என்று சமயத் துறையினர் கூறியிருத்தல் நினைவில் கொள்ளத் தக்கது. மாறுபட்ட குணமுடைய பூதங்கள் தோறும் நீயே நிற்கின்றாய் என்று விராதன் கூறுவதில் ஒர் ஆழமான பொருள் இருத்தலை அறிய வேண்டும். முரண்பாட்டில் (y"Gpaygpat) 806, diafrl-6ufra,6ir (finding unity in diversity) இத்தமிழர் ஆவர். அக் கருத்தைத்தான் பாடலின் மூன்றாம் நான்காம் அடிகள் விளக்குகின்றன. இவ்வாறு கூறியவுடன் உயிர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாய், கருத்துள் அடங்காததாய், பற்றிக்கொள்வதற்கு இடம் தராததாய் அவ்விறைவனின் திருவடி (திருவருள்) இருந்து விடுமோ என்ற அச்சம் யாவர்க்கும் உண்டாவதே ஆகும். இறப்ப உயர்ந்து நிற்கும் அப்பரம்பொருள் சிற்றுயிர்கள் மனமுருகி வேண்டும்பொழுது தன் உயர்ந்த நிலையிலிருந்து கருணை காரணமாகக் கீழிறங்கி அச்சிற்றுயிர்க்கு உற்ற துணையாய் வருகின்ற எளிவந்த தன்மை (செளலப்பியம்) உடையது என்பதைக், - .