பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 117 வஞ்சனையால் கவர்ந்து சென்றபொழுது அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிருந்த மக்கள், தேவர்கள், ஒரறிவுடைய மரஞ் செடி கொடிகள் ஆகிய அனைவரிடத்திலும் சினம் கொண்டு இவர்களை அழித்துவிடுகிறேன்' என்று புறப்படுகிறான். காப்பவனாகிய அவன் (திருமால் அழிப்பேன் என்று தொடங்கினால், யார் அவனைத் தடுக்க முடியும்? உலகமெல்லாம் கலக்கிமுடிக்கும் இலக்குவன் சினந்தால் இராகவன் அவன் சினத்தை மாற்றமுடியும். இராகவனே சினந்தால், அவனை மாற்றுபவர் யார்? இத்தகைய அற்புதமான சூழ்நிலையை உண்டாக்கி, கவிஞன் தான் படைத்த சடாயுவைப் பேசுமாறு செய்கிறான். இப்பொழுது இராகவன் கொண்ட சினம் நியாய மற்றது என்பதை நாம் அறிவோம். தசரதன் ஒருவனைத் தவிர இராகவனை யார் கண்டிக்க முடியும் தசரதனோ இப்பொழுது இல்லை. எனவே, தந்தை செய்யவேண்டிய கடமையைச் சிறிய தந்தையாகிய சடாயு செய்கிறான். வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் - வைக, கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டிர் அம்பு இழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை, உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் - உண்டோ? (3525) இராகவன் சினத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சடாயு பேசத் தோடங்குகிறான். "மைந்தர்களே, அழகிய பெண் ஒருத்தியை எவ்விதக் காவலும் இன்றிக் காட்டில் விட்டு விட்டு, ஒரு மானைத் துரத்திக்கொண்டு சென்றதால் உங்கள் குலம் முழுவதற்கும் பழி தேடிக் கொண்டீர்கள். அவ்வாறு சென்றதற்கும் அதனால் விளைந்த விளைவுகட்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் செய்த இப்பெரும் பிழையைத் தவிர உலகத்தார். செய்த பிழை வேறு என்ன இருக்க முடியும் இதனைக் கேட்ட இராகவன் சினம் முற்றிலுமாக