பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 119 காலம் வந்தவுடன் அவ்வுடலை அழிப்பது போல இவள் உள்ளாள் என்கிறான் கவிஞன். சூர்ப்பனகையைப் பொறுத்தவரை, இராமனது அழகில் ஈடுபட்டு அவனை அடைய விரும்பினாள். பிராட்டியைக் கண்டு திடுக்குற்றாள். இப்படியும் ஓர் அழகி இவ்வுலகிடை இருக்க முடியுமோ எனக் கருதினான். இந்த நிலையில் பெண்களுக்கே உரிய ஒரு தருக்கத்தைத் தன்னுள் தோற்றுவித்துக்கொள்கிறாள்; மூன்று உலகங்களிலும் காணப்பெறாத இத்தகைய அழகி இராமன் மனைவியாய் இருப்பாளோ என்று ஐயுற்றறாள். இவள் இவன் மனைவியக இருப்பின், அவளைப் பெற்ற இராகவன் பிற பெண்களை ஏறெடுத்தும் பாரான் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். இது நியாயமானதும் பொருத்தமானதும் ஆன வாதம் ஆகும். ஆனால், அவள் காம வெறி காரணமாகத் தான் கொண்ட இம் முடிவைப் புறத்தே ஒதுக்கிவிட வழி தேடுகிறாள். அம்முயற்சியின் பயனாக ஒரு குதர்க்க வாதம் அவள் மனத்தில் தோன்றுகிறது. இவ்வளவு அழகு உடையவள் மனைவியாக இருப்பின் எந்த ஒரு மனிதனும் காட்டுக்கு அழைத்து வந்து பர்ணசாலையில் குடியேற்றியிருக்க மாட்டான் (2790) என்பது அவளுடைய வாதம். இந்த முடிவிற்கு அவள் வர எந்த ஆதாரமும் இல்லை. இந்தத் தவறான முடிவிற்கு வந்தவுடன் அவள் மனம் இதற்கடுத்து ஒரு முடிவிற்கு வந்தவுடன் அவள் மனம் ஒரு வினோதமான முடிவிற்கு வருகின்றது. காட்டிலே மனைவியைக் கொண்டு வரமாட்டான் என்ற தவறான முடிவிற்கு வந்த பிறகு, அந்த தவற்றிலிருந்த பல தவறுகள் பிறக்கின்றன. காட்டிலுள்ள இவன் அவன் மனைவி அல்லள் என்றால், இவள் யார் என்ற வினா அடுத்து நிற்கிறது. அவள் தமையனாகிய இராவணனுடைய அத்தாணியில் அரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய அனைவரையும் இவள் பன்முறை கண்டிருக்கிறாள். இப்பெண்ணின் அழகு அவர்கள் ஒருவரிடமும் இல்லை. அப்படியானால் இவன் யார்? யாரென்பகை இவளால் யூகிக்க முடியவில்லை என்றாலும், மனைவி அல்லள் என்ற தவறான முடிவிற்கு அவள் ஏற்கனவே வந்துவிட்டமையின், அவள் யார் என்ற வினாவிற்கு