பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 145 இன்பத்திலும் இருக்கின்றவன் ஆவான். எனவே, அவனாகத் தன் சுய முயற்சியால் இந்த அனுபவத்தைப் பெற முடியாது. இதனை நன்குணர்ந்த அண்ணனாகிய வாலி தம்பியின்மாட்டுக் கொண்ட பரம கருணையால் ஐந்து பாடல்களில் இவ் அருங்கருத்தை விளக்கத் துவங்குகிறான்: மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத் துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி - வில் தூக்கி, அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது. இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய். (4073) இப்பாடலின் கடைசி அடி தன் தம்பியின் குண நலன்களைத் துல்லியமாமக எடை போட்டிருந்தான் வாலி என்பதை அறிவிக்கின்றது. இராமனைத் தனக்குத்துணையாக வந்த வலிமை மிகுந்த அரச குமாரன் என்றுமட்டுமே கருதி யிருந்தான் சுக்கிரீவன். “மழ க்கையிலங்கு பொற்கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்" (திருவாசகம், திருச்சதகம் 92) என்று மணிவாசகப் பெருமாள் கூறியதற்கு ஒப்ப, இளங்குழந்தையின் கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமைப்பாட்டைக் குழந்தை அறிய வில்லையாதலால், இப்பாடலில் முதல் மூன்று அடிகளில் இராமன் யாரென்பதைத் தம்பிககு உணர்த்தத் தொடங்கு கிறான். அவன் பரம்பொருள்தான் என்பதைக் காட்சிப் பிரமாணத்தாலும் நிறுவுவதற்காகத் தன் மார்பில் அம்பு எய்தமையைக் குறிப்பிடுகிறான். • * : * ~ * -- நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்கள் . . . . . - - - ճT6ն)5ԱրIլն கற்கின்றது இவன்தன் நாமம்; கருதுவது இவனைக் - கண்டாய், பொன் குன்றம் அனைய தோளாய்! பொதுநின்ற - தைைலமை நோக்கின் எற்கொன்ற வலியே சாலும். இதற்கு ஒன்றும் ஏது . . . . வேண்டா. 4074) ,