பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 167 "உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன்நாள் சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்” (38s) என்றும், "மற்று, இனி உரைப்பது என்னே ? வானிடை மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தியரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்." (3812) என்றும் அவசரப்பட்டு, இரக்கம் காரணமாக, இராகவன் கொடுத்த வாக்கே பெருவியப்பைத் தருவதாகும். ஒரு பொருளை முழுவதும் அறியாமல் வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு அந்த வாக்கைக் காப்பதற்காகச் சில வேண்டாத செயல்களையும் செய்ய நேரிடுகிறது. சுக்கிரீவன் பகைவன் யாராக இருப்பினும், அவனை ஒர் அம்பால் விண்ணுலகம் உய்ப்பதும், கூட்டு ஒருவரையும் வேண்டா அக்கொற்றவனுக்கு இயலும், அளவு மீறிய இரக்கமும் தன் ஆற்றல்பால் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் சேர்த்து இராமனை நின்னைச் செற்றார் என்னைச் செற்றார், தீயரே எனினும் நினக்கு உற்றார் எனக்கும் உற்றார் எனப் பேச வைக்கிறது. இவ்வாறு வாக்குக் கொடுத்த பிறகுதான் சுக்கிரீவனின் பகைவன் யாரென்பதை முதன்முதலாக இராகவன் அறிகிறான். வாலியின் வீரம்பற்றி அனுமன் கூறிய அத்துணைச் செய்திகளும் சிவ தனுசை ஒடித்து, பாசுராமன் வில்லை வளைத்து, கர துடணர் முதலியவர்களை விண்ணுலகம் அனுப்பிய வீரனுக்கு வாலியின் வீரம்பற்றிய வரலாறு எவ்வித அதிர்ச்சியையும் வியப்பையும் தரவில்லை என்பது உண்மைதான். அனுமன் கூறிய் வரலாற்றில் இடையே இராகவனை அசத்துகின்ற ஒரு செய்தியும் அனுமனால் கூறப்பெற்றது. . . கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல் வலம் பாகம் எய்துவான்; எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று, . . அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான். (3825)