பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அச ஞானசம்பந்தன் 169 கூட அனுமனாலோ, சுக்கிரீவனாலோ சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் உண்மையான தர்மசங்க்டத்தில் அகப்பட்டுக்கொள்கிறான், தசரக குமாரன். தம்பியிடம் யோசனை கேட்கலாம் என்றால், தொடக்கத்தி லிருந்தே சுக்கிரீவன் செயலை வெறுப்பவனாகவே உள்ளான். ஆகவே, இராமனின் தர்மசங்கடம் வலுவாகிவிட்டது. சவரி முதலானவர்கள் தன்னைச் சுச்கிரீவனிடம் அனுப்பியதில் ஏதோ ஒரு காரணம் இருப்பதை இராகவன் நினைக்கிறான். பிராட்டியை மீட்க வாலி ஒருவனே போதுமானவனாக இருக்க, அவனிடம் டோகச் சொல்லாமல் அஞ்சி வாழும் அப்பாவியாகிய சுக்கி:னிடம் போகச் சொல்லியதற்குத் தக்கதொரு காரணம் இருத்தல் வேண்டும் என்பதைச் சிந்தித்த இராகவன், சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததில் தவறொன்றும் இல்லை. அதைக் காப்பாற்ற வேண்டுமாயின் வாலியின் வரம் மைைலபோலக் குறுக்கே நிற்கின்றது. என்ன செய்வது? இராகவனுடைய வாழ்க்கையில் இதுபோன்ற தர்மசங்கடம் முன்னரும் எழுந்துள்ளது. ஆனால், அந்தத் தர்மசங்கடத்திலிருந்து விடுவிக்க ஒரு பெருந்துணை இருந்தது. அந்தத் தர்மசங்கடத்தை உண்டாக்கிய தாடகை பிறர்க்கு இன்னா செய்கின்றவள். வாலியைப் பொறுத்தமட்டில் அதுவும் இல்லை. இந்த நிலையில் வாலியைக் கொல்வதற்கு, சுக்கிரீவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதற்கு, சவரி கூறியன அறிவுரையை ஏற்பதற்கு, ஒரே வழிதான் உண்டு. அந்த வழியை மேற்கொள்வதானால் நல்வலம் பாகம் எய்துகின்ற ஒரு தடையு ளது. இத்தடையை மீறவேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. அந்த வழிதான் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இராமன் மேற்கொள்கின்ற முடிவாகும். அந்த வழி வேறு நின்று எவ்விடத் துணிந்தது என்பதாகும். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இம்முடிவுக்கு வந்தேன் என்பதைச் சுக்கிரீவனுக்குச் சொல்லும்பொழுது இது என் கருத்து என்று கூறி முடிக்கின்றான். . . . . எதிர்ப்பட்ட தர்மசங்க்டத்திலிருந்து மீள மறைந்து நின்று அம்பு தொடுத்து வாலியைக் கொல்வது என்ற முடிவிற்கு