பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கம்பன் எடுத்த முத்துக்கள் இருக்கின்ற சிறுவனிடம் - ஏன் இது நடைபெறுகிறது என்று அறிந்துகொள்ள முடியாத மன நிலையில் உள்ள அங்கதனிடம் - தசரத குமாரன் தன் வாளை நீட்டி “நீ இது பொறுத்தி" என்று சொல்வதாகவும், இதனைப் பார்த்துக்கொண்டே வாலி உயிர் நீத்ததாகவும் பாடல் அமைந்துள்ளது. தன் அடி தாழ்தலோடும், தாரைத் தடங் கணானும் பொன் உடைவாளை நீட்டி, நீ இது பொறுத்தி என்றான்; என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி, அந்நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். - (4093) பல கருத்துவேறுபாடுகளுக்கு இடம் தரும் பாடலாகும் இது. பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்' என்ற தொடருக்கு இதனை வைத்துக் கொள் என்றே பலரும் பொருள் கூறியுள்ளனர். பொறுத்தி என்ற சொல்லுக்கு வைத்துக்கொள் அல்லது ற்றுக்கொள் என்றுபொருள் கொள்வது பொருத்தமாகப் படவில்லை. இவர்கள் கருத்துப்போல் நீ இதை வைத்திருப்பாயாக என்ற பொருளில் இராகவன் கூறியிருந்தால் உலகம் ஏழும் ஏத்தின என்று கம்பன் அடுத்தாற்போல் கூறுவதற்குப் பொருளே இல்லாமல் போய்விடும். மாபெரும் நிகழ்ச்சியொன்று நடைபெற்ற இக்களத்தில் இராகவன் திடீரென்று தன் உடைவாளைக் கொடுக்க வேண்டிய தேவை என்ன? அதுவும் சில விநாடிகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பெற்று, அடைக்கலப்படுத்தப்பெற்ற ஒரு சிறுவனிடம் அரசனின் <SZGIrrg Gsät so –uftgit G z_stst (symbol of authority) வாளை ஏன் தர வேண்டும்; வாளை வைப்பதற்கு இடமில்லாமல் அங்கதனிடம் தந்தானா? அரசனின் உடைவாளை ஏந்திச் செல்பவர்கள் அரசனிடம் அதிகாரப் பொறுப்பைப் (power of authority) பெற்றவர்கள்போல் கருதப்படுவர். அவனது முழு நம்பிக்கை க்குப் பாத்திரமானவர்கள் மட்டுமே உடைவாளை ஏந்தும் பொறுப்பினை வகிப்பார்கள். அரசனுடைய முத்திரை மோதிரம் பெற்றவர்களைவிட அதிக அதிகாரப் பொறுப்பை