பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* f84 கம்பன் எடுத்த முத்துக்கள் பிரச்சினையை உண்டாக்கும் தொண்டனாவான் அவன். ஆனால், அனுமனுடைய தொண்டு தனியான ஒன்றாகும். 'நான் என்ற அகங்காரத்தையும், எனது' என்ற மமகாரத்தையும் அறவே போக்கியவன் அனுமன். இவன் கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை (3768) என்றும் உலகுக்கெல்லாம் ஆணி’ (3769) என்றும், நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது (3783) என்றும் இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான். கோட்படாப் பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரம் என்பது சொல்லாமலே விளங்கும். குகனும் செருக்கறுத்த பாத்திரமேயாவான். குகனும் செருக்கறுத்த பாத்திரம்தான் என்றாலும், செருக்கைத் தரக்கூடிய கல்வி, கேள்வி அவன்மாட்டு இல்லை. ஆனால், அனுமனைப் பொறுத்தமட்டில் கலைக்கடல், வேதக் கடல் ஆகியவற்றைக் கரைகண்டவன் என்று வேத நாயகனே கூறுகிறான். அப்படியிருந்தும் அதனால் பெறும் செருக்குச் சிறிதுமின்றி ஒரு தொண்டனாக வாழ்கிறான் என்றால், அவனைப் படைப்பதன்மூலம் தொண்டு என்ற பண்பிற்கே ஒரு வடிவம் தந்துவிடுகிறான் கம்பநாடன் என்பதை அறியமுடிகிறது. சுக்கிரீவன் உயிர் வாழ்வதற்கும் இராமன் உதவியை நாடுவதற்கும் அவன்மூலமாகத் தாரத்தோடு தலைமையும் பெறுவதற்கும் காரணமாக இருந்தவன் அனுமன் ஒருவனே ஆவான். - . அனுமனுடைய அபர ஞானம், பர ஞானம் என்ற இரண்டும் எத்தகையன என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கோடிட்டுக் காட்டிவிடுகிறான். தூரத்தே வரும் இராம -இலக்குவரைக் கண்டு ஒடி மலை முழைஞ்சில் ஒளிந்து கொள்கிறான் சுக்கிரீவன். அவனுக்கு ஏவல் கூவல் பணி செய்பவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அனுமன் மறைந்துநின்று இரு வரையும் நோக்குகிறான். இருகின்றவர்களுடைய அங்க அடையாளங்கள் சாமுத்திரிகா ஒட்சணம், அவர்கள் பாதம் பட்டவுடன் பூமியில் தோன்றும் மாறுதல்கள், அவர்கள் உடம்பு பட்டவுடன் பட்டுப்போன