பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is கம்பன் எடுத்த முத்துக்கள் . செல்லும் இடங்களும் இந்நூலில் பல உள்ளன. . . . . .' ... " "கம்பனது இராம காதையில் கிட்கிந்தா காண்டம் நான்காவதாகும். மொத்தம் உள்ள ஆறு காண்டங்களில் அயோத்தி, ஆரணியம், கிட்கிந்தை என்ற மூன்று காண்டங்களும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்பற்றிப் பெயர் பெற்றனவாகும்." - - என்ற பெயர் விளக்கத்தோடு, காப்பிய வளர்ச்சியில் முதல் திருப்புமைய மாக அமைந்தது கைகேயி வரம் பெறுதலாகும். இரண்டாவது பெரும் திருப்பு மையம் சூர்ப்பனகை சூழ்ச்சியாகும்.” என்று கூறி, காப்பிய நிகழ்ச்சிப் போக்கை எந்தப் பகுதி நடத்திச் செல்கிறது என்பதை அ.ச.ஞா. புலப்படுத்துகிறார். சூர்ப்பணகை சூழ்ச்சி இராமகாதைக்கு ஏன் இன்றியமையாதது என்பதைச் சுட்டுவதோடு அமைந்துவிடவில்லை; உருவக் கட்டமைப்பைப் பற்றி எண்ணிப்பார்க்கும் எவரும் இதனைச் சொல்லிவிடுவார்கள். கிட்கிந்தா காண்டத்தில் வரும் இரண்டாவது திருப்புமையத்தைச் சுட்டியதோடு, அக் காண்ட நிகழ்ச்சிகளிடையே அழுத்தமான இடத்தைப் பெறுகின்ற வாலிவதையின் முக்கியத்துவம் ஒரு நெருடலாக அமைகின்றது என்பதையும் எடுத்துக்காட்டி விளக்குவது பேராசிரியர் அ.ச.ஞா.வின் சிறப்பாகும்.

"..... படிப்பவர்கள். கதை மாந்தர்கள் ஆகிய இரு தரப்பினருள் யாரும் எதிர்பாராத ஒரு தடை இருக்கிறது." - என்று கூறி, வாலி இடம் பெறும் நிலையை காப்பிய வடிவியல் விளக்கத்தைத் தருகின்ற திறம் நன்கு அமைந்துள்ளது. (விளக்கமும் விரிவும் நூலினுள் காண்க) கரன் வதைப் படலத்தைப் பின்னர் வரப்போகும் யுத்த காண்டத்திற்கு முன்னுரை என்று குறிப்பது ஆரணிய காண்டிப் படலங்கள் பதின்மூன்றில் 1, 12 ஆம் படலங்களை