பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 19 கட்டமைப்புக்குச் சோதனை காண்டங்கள்தோறும் அமைப்பியல் / கட்டமைப்புப் பற்றிச் சிந்தனை செலுத்திக் கணிக்கின்ற ஆராய்ச்சி யாளர்க்குக் கம்பராமாயண அமைப்பு இரண்டு சோதனைகளை / தடைகளை எழுப்பும். கம்பராமாயணக் கட்டமைப்பு முழுவதையும் ஆட்டம் காண வைத்திடுமோ என்ற ஐயத்தை இரணியன் வதைப் படலம் எழுப்பும், செறிவும் இயைபும் கொண்டு இலங்கும். கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் மூன்றாவதாகவுள்ள இரணியன் வதைப்படலம் காப்பியக் கட்டமைப்புக்குத் தொய்வு ஊட்டுவதாக அமைகின்றதே என்ற ஐயம் எழுவதைத் தடுக்க முடியாது. கொந்தளிப்பு மிகுந்த சூழ்நிலையிலே முதலாம் இராவணனாகிய இரணியனின் கதையை நீளமாக (176 பாடல்கள்) நிதானமாகப் பேசிக்கொண்டிருக்க முடியுமா? சொல்லுகிற வீடணன் ஒருகால் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்திருக்கக் கூடுமென்றாலும், இராவணனோ அவனுடைய அவைக்களமோ கதையளப்பைக் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்திருக்க முடியாது. எனினும், கவிச்சக்கரவர்த்தி 176 பாடல்களை மற்றொன்று விரித்தல் போலவும் வெற்றெனத் தொடுத்தல் போலவும் எண்ணத்தக்க இப் படலத்தை ஏன் பாடினார்? "இரணியப் படலம் ஒன்று தவிர ஏனைக் கம்ப ராமாயணம் முற்றும் அழிந்துவிட்டாலும் பெரிதல்ல. கம்பருடைய கவித சாமர்த்தியத்தையும் இயற்கைப் புலமையினையும் காட்ட இப் படலம் ஒன்றுமே போதுமான சான்றாகும்" . எனத் திருமணம் பேராசிரியர் செல்வக்கேசவ முதலியார் நெடும்பல ஆண்டுகளுக்கு முன்னரே கருத்துக் தெரிவித்திருக்கிறார். பேரா. செல்வக்கேசவர் தரும் மதிப்புரை கவிதை நயத்துக்குப் பொருந்தினாலும் காப்பியக் கட்டமைப்புப் பற்றியதாக இல்லை. .