பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 255 யாருடைய தலைமையின்கீழ்ப் பணிபுரிகின்றார்கள் என்றும் கம்பநாடன் பேசுகிறான். இலங்கையில் கிழக்கு வாயிலை எடுத்துக்கொண்டால் அதனுள்ளே இருந்து காக்கின்ற இராவணனுடைய படைகள் சேனைத் தலைவர்களின் தலைமையின்கீழ்ப் (6963) பணிபுரிகின்றனர். அப்பகுதியை வெளியே இருந்து முற்றுகை இடும் இராமன் படைகள், நீலன் தலைமையில் (695, அமைந்துள்ளனர். தெற்கு வாயிலின் உள்ளே மகோதரன் தலைமையில் அரக்கர் படைகளும், வெளியே அங்கதன் தலைமையில் (695, குரங்குப் படைகளும், உள்ளனர். மேற்கு வாயிலின் உள்ளே இந்திரசித்தன் தலைமையில் (6965) அரக்கர் படைகளும், வெளியே மாருதி' தலைமையில் (6950) குரங்குப்படைகளும் உள்ளனர். வடக்கு வாயிலின் உள்ளே காவல் செய்யும் அரக்கர் படை இராவணன் தலைமையிலும் (6967), வெளியே உள்ள குரங்குப்படை இராமன் தலைமையிலும் (6952) போர் புரியத் தயாராக உள்ளனர். ... ' ' , - இலங்கையின் அமைப்பையும், இந்தியாவின் அமைப்பையும் புவிஇயல் அடிப்படையில் இன்று பார்க்கலாம். இராமேஸ்வரம் வழியாக உள்ளே புகுந்து குரங்குப் படைக்கு எதிரே, இலங்கையின் நடுவே இராவணன் கோட்டை அமைந்திருந்தது என்று சொல்வதில் தவறில்லை. ஒரே நேராக சேதுவின் வழி இலங்கையின் உள்ளே சென்று இறங்கிய குரங்குப் படைகள் கோட்டையை அடையும் வரை கவட்டையாகப் பிரிந்து செல்கின்றன. கவட்டையின் மேல் பகுதி வடக்கு வாயிலை நெருங்கியவுடன் அதன் ஒரு பகுதி கோட்டையைச் சுற்றிச் சென்று கீழ்த்திசை வாயிலை அடைகின்றது. இறங்குதுறையிலிருந்து கவட்டையாகப் பிரிந்ததில் கீழ்ப்பகுதி மேற்கு வாயிலை அடைகின்றது. அதிலிருந்து ஒரு பகுதி பிரிந்து சென்று தெற்கு வாயிலை முற்றுகை இடுகின்றது. இவ்வாறு படைகள் கவடாகப் பிரிந்து சென்று பகைவர்களைச் சூழ்ந்துகொள்ளும் முறையை முதன்முதலாக வகுத்தவர் இரண்டாம் உலகப் போரில் பெரும் பெயர் எடுத்த ஜெனரல் ரோமல் என்ற ஜெர்மானியத் தளபதி ஆவார். இந்த முறையைப் பின்பற்றி நேசக் கட்சிகளின்