பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கம்பன் எடுத்த முத்துக்கள் கர்வம் கொண்டு பேசுகிறான் இரணியன். திரிமூர்த்திகளில் ஒருவனாக இரணியனால் பேசப்படும் நாராயணன், எங்கும் யாவற்றிலும் நிறைந்து உள்ள விராட் ஸ்வரூபத்தின் ஒரு பகுதியே ஆகும். அதுவே முழுப்பொருள் என்று நினைத்து விடாதே. அவன் இல்லை என்று பேசும் நீயும், உன்னை அவ்வாறு பேசச் செய்யும் உன்னுள் இருப்பவனும் அந்த நாராயணனின் ஒரு பகுதியே ஆகும் என்று சொல்லவந்த பிரகலாதன், நீ சொன் சொல்லிலும் உளன் என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. இல்லை என்ற சொல்லிலும், இன்மைப் பொருள் தரும் சொல்லிலும் அவனே உள்ளான் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. "உளன் எனில் உளன் அவன்" (திவ்வியப்பிரபந்தம் - 2683) என்று தொடங்கும் நம்மாழ்வார் பாடலின் 2வது அடி இலன் எனின் இலன் அவன்' எனும் இதே கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். இரணியனுக்கு ஈடு சொல்ல முடியாத ஆணவம் தலைதுாக்கிநின்றது என்பதைக் கம்பன் எடுத்துக்காட்டுகிறான். இத்தகைய ஒர் ஆணவம் அவனிடை வளர்வதற்கு அவனுடைய கல்வியும் ஒரு காரணமாகும். வேதங்களை நன்கு கற்றதனால் இந்த ஆணவம் தலைக்கேறியது. அதன் பயனாக, அனைத்தும் அவன் என்ற நினைவு போக, 'அனைத்தும் நான் என்ற அகங்காரம் வலுவடைந்தது. அவன் கற்ற அதே வேதங்களைக் கற்ற பிரகலாதனுக்கு, அனைத்தும் அவனே என்ற உறுதிப்பாடு வலுப்பெற்றது. அறிவின் அடித்தளத்தில் பக்தி இருந்தால் அனைத்தும் அவன் என்ற எண்ணம் தோன்றுகிறது. பிரகலாதன் நிலை இதுவாகும். எனவே, அத்வைதமும், உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ம் நூற்றாண்டில், தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன் பொருத்தினான் என்பதனை அறியலாம். வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப்பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே காரணமாக இருந்தது போலும். இவ்வாறு கொள்ளாமல், தேரழுந்துரில் உள்ள திருமால் கோவிலில் காணப்பெறும்