பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 287 போர்க்களத்தில் வருகின்ற இந்திரசித்தனைப் பார்த்து, ‘இவன் யார் என்று வீடணனைக் கேட்கிறான். வீடணன் கூறிய இரு வரி விடை சிந்திக்கவேண்டிய தாகும். 'ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப் போர் கடந்தவன்; இன்று வலிது போர் என்றான். (8029) இலக்குவன் வினாவிற்கு மிகச் சிறந்த முறையில் விடை அளித்த வீடணன், மிக்க பய பக்தியோடு இலக்குவனுக்கு அவன் கேளாமல் இருக்கையிலும் சில அறிவுரைகளைக் கூறத் தொடங்குகிறான். இலக்குவனைப் பொறுத்தமட்டில் அதிகாயனை வென்றுவிட்ட காரணத்தால், ஒரு வேளை இந்திரசித்தையும் அதேபோல எளிதாக வெல்லலாம் என்று நினைத்திருக்கக்கூடும் என்று வீடணன் கருதியதால், இந்த அறிவுரையினைக் கூறுகிறான். அப்படி ஒருவேளை இலக்குவன் நினைத்துவிட்டால் அது பேராபத்தில் முடியும் என்று வீடணன் கருதினான். ஆதலாலும், இவ்வறிவுரைகளைக் கூறினான். "எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று - எம்பிரான்! கண் அகன் பெரும்படைத் தலைவர் காத்திட, நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது திண்னிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால், (8030) "மாருதி, சாம்பவன், வானரேந்திரன், தாரை சேய், நீலன் என்று இணைய தன்மையார், வீரர் வந்து உடன் உற, விமல! - நி நெடும் போர் செயத் தகுதியால் புகழின் பூணினாய் ! (803.) 'பலரையும் துணைக்கு வைத்துக் கொண்டு, நீ இவனுடன் போர் புரிய வேண்டும் என்று சொல்லப்புகுந்த வீடணன், தன் சொல்லை இலக்குவன் அசட்டை செய்துவிடுவானோ என்ற கருத்தில், "திண்னிதின் உணர்தியால்" என்ற ஒரு