பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 297 இராவணன் பழைய இராவணன் இல்லை. காமத்தால் வலிவிழந்த இராவணன் இப்பொழுது தூக்க முயன்றத யாரை மணம் செய்து கொண்டும் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளாகத்தன் நாயகன் திருவடி தவிர காமம் உள்பட வேறு ஒன்றையும் தன் மனத்தில் வினாடியும் நினையாமல் உறக்கத்தையும் துறந்து பிரம்மச்சரிய விரதத்தில் தலைநின்றவனாகிய இளைய பெருமாள்ை அல்லவா இராவணன் துரக்க முயலுகிறான். பிரம்மசரியத்தை காமம் தூக்க முடியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. இக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே. 'சி பலியாமல் போனபொழுது, அனுமன் சேயை எடுக்கு ப்போல் இலக்குவனை எடுத்துச் சென்றான் என்று கவிஞன் பேசுவது இக்கருத்தை வலியுறுத்துகிறது. அனுமன் பிறந்தது முதலே மாதர் நலம் பேணாதவனாக, நைட்டிக பிரம்மச்சாரியாக இறைவன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நினையாதவனாக வாழ்பவன் அல்லவா? எனவே, அனுமன் எளிதாக இலக்குவனைத்துக்கிச் சென்றான் என்று கவிஞன் கூறுவது பொருத்த முடையதே ஆகும். பதினான்கு ஆண்டு பிரம்மச்சரியத்தை நைட்டிக பிரம்மச்சரியம் எளிதாகக் துக்கியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், கயிலையைக் துக்கிய இருபது கைகளாலும் இலக்குவனைத் தூக்க முடியாமல் போனதற்குக் காரணத்தைக் கவஞன் பின்வரும் பாடலில் வேறுவிதமாகக் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும். 'அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம் பொன் உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே தொடுத்த எண் வகை மூர்த்தியைத் துளக்கி, வெண்பொருப்பை எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் - இராமனுக்கு r இளையான், (7226) இராவணன் முய, "இக்கருத்து வான்மீகியின் பால காண்டம் 18வது சருக்கம், 11, 12 ம் பாடல்களை ஒட்டி எழுந்த கருத்தாகும்.