பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 307 அவன்மேல் ஏவப்பட்டபோதும் தன்னைத் தானே காத்துக்கொண்டான். தெய்வப்படைகளின் உதவி இன்றித் தன் ஆற்றலை நம்பியே வாழ்பவன் அவன் (920) இவ்வாறு கூறுவதால் போருக்கு அஞ்சித் தப்பிவந்து நான் பேசுகிறேன் என்று தயவு செய்து நினைத்துவிடாதே. சீதையிடத்து நீ கொண்ட தவறான ஆசையினை விட்டுவிட்டு, அவளை அவர்களிடம் சேர்ப்பித்தால் அவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். நீ செய்த பிழையையும் பொறுப்பர். உன்பால் நான் வைத்த அன்பின் அடையாளமாகவே இதனைச் சொல்கிறேன்" (912) இவ்வாறு கூறும் இந்திரசித்தனைக் கோழை என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என்று நினைத்த கவிஞன், இதனைக் கூறியவன் உலகெல்லாம் கலக்கி வென்றான்' என்று கூறிப் பாடலை முடிக்கின்றான். அப்பாடல் வருமாறு: ஆதலால் "அஞ்சினேன்" என்று அருளலை, ஆசைதான் அச சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல் காதலால் உரைத்தேன்' என்றான் - உலகுனலாம் கலக்கி - - வென்றான். (912) இராவணன் மந்திரசபையில் இவன் பேசிய பேச்சுக்கள் எத்தகையவை! நான் ஒருவனாகவே சென்று உன்பகை முடிக்கின்றேன் என்றல்லவா கூறினான்! அப்படிப் பேசிய, இந்திரசித்தன் இப்பொழுது முழுவதுமாக மாறி, ஆழ்ந்த சிந்தனையுடன் அறிவைப் பயன்படுத்தி அல்லவா இந்த முடிவுக்கு வருகிறான்! கல்வி, கேள்விகளிலும், வர பலத்திலும் இராவணனுக்கு இணையானவன் இந்திரசித்தன், ஏன் ? ஆணவத்தில்கூடத் தந்தைத்குச் சளைத்தவன் அல்லன். அப்படி இருந்தும், இவ்வாறு மனம் மாறக் காரணம் யாது? தன் ஆற்றலுக்கு எதிரே ஈடுகொடுக்க முடியாமல் இந்திரனும் தேவர்களும் ஓடினார்கள். ஆதலால், இரு மானிடரையும் குரங்குக் கூட்டத்தையும் நொடிப்பொழுதில் வெல்ல முடியும் என்று அவன் நினைத்ததில் தவறில்லை. நாக பாசப்