பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கம்பன் எடுத்த முத்துக்கள் பார்த்து நீ நடந்து கொள்வது சரியில்லை என்று அண்ணன் மனைவி பேசினால் இதைவிடப் பெரிய தவறு வேறு இருக்க முடியாது. ஆகவே, இவ்வாறு நினைந்து நினைந்து இளையவனுக்கு அறிந்தோ அறியாமலோ பெருந்தவறு இழைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு பிராட்டியின் மன ஆழத்தில் வலுவாகப் பதிந்து விட்டது. குற்ற உணர்வினால் வருந்துகின்ற பிராட்டியின் இளைய பெருமாளும் விரைவில் சந்தித்து அயோத்தி சென்று ஒரே இடத்தில் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. குற்ற உணர்வுடைய ஒருத்தி எவ்வளவுதான் மறக்க முயன்றாலும் இலக்குவனைப் பார்க்கும் போதெல்லாம் அந்த குற்ற உணர்வு அவளுடைய மனத்தில் நெருடிக் கொண்டே இருக்கும். எனவே, அக்குற்றம் போகவேண்டு மானால் இலக்குவனால் தான் ஒரு தண்டனையை அடைய வேண்டும். அதுவே தான் செய்த குற்றத்திற்கு கழுவாய் என்று நினைக்கிறாள் பிராட்டி - இதனை நன்கறிந்து கொண்ட இராகவன், பிராட்டியை நெருப்பில் விழ முற்படும் நிலைக்கு அவளை ஏசுகிறான். நெருப்பில் விழ முடிவுசெய்த பிராட்டி இலக்குவனைப் பார்த்து 'நீ எனக்கு நெருப்பு அமைத்து தா! என்று வேண்டுகிறாள். நெருப்பு அமைக்க வேண்டுமானால் இலங்கை வாசியான வீடணனை அல்லவா அவள் கேட்டிருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு இலங்கைக்கு முற்றிலும் புதியவனான இளையவனை நோக்கி, தீ அமைத்து தா என்ற கேட்பதிலிருந்தே அவனால் தனக்கு தண்டனைத் தரப்பட்டால் தன் குற்ற உணர்விலிருந்து கழுவாய் தேடிக்கொள்ள முடியும் என்று அவள் விரும்புகிறாள் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். அக்ளிப் பிரவேசம் என்ற இந்த முழுநிகழ்ச்சியும் பிராடிடியின் குற்ற உணர்வைப் போக்க அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் நடத்திய நாடகமே என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம். தீ அமைக்க என்று பிராட்டி கேட்டவுடன் நடுங்கிப் போன இலக்குவன், அண்ணன் முகத்தைப் பார்க்கிறான்.