பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 8f முறையில், '....” Yours is not to question why, but to do and die என்று ஏற்றுக்கொள்வதுதான் மற்றொரு வகையாகும். "யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு" (382) என்ற இந்த இரண்டாவது வழியை மேற்கொள்கிறான். "யான் நின்வயின் பெறுவது ஈது" (381) என்று தந்தையோ கெஞ்சுகிறான். மகனோ கொற்றவன் ஏவியது என்று சொல்லுகிறான். இந்த இரண்டுக்குமுள்ள மாறுபாட்டை நன்கு சிந்தித்தல் வேண்டும். "யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ - நீதி எற்கு" - (1382) என்று நினைக்கின்றான் இராகவன். ஆகவே, தசரதன் வரம் கொடு என்று கெஞ்சினாலும், அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் சக்கரவர்த்தி தனக்கு ஆணையிட்டதாகவே நினைக்கின்றான் தசரத குமாரன், கொற்றவனுடைய ஆணையை மீறுதல் என்பது யாருக்கும் இயலாத காரியம். அந்த முறையில் அது சரியோ, தவறோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் இது சக்கரவர்த்தியினுடைய ஆணை. அதை நிறைவேற்றுவதே தன்னுடைய கடமை, அதுவே தர்ம்ம்' என்ற கருத்தில் இருந்தான்' என்று கம்பன் மிக அற்புதமாகச் சொல்வான். - - - இராமனுக்கு ஏற்பட்ட இரண்டாவது தர்ம சங்கடமான நிலை இது.தாடகை விதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடத்தையும் இப்படித்தான் தீர்த்துக்கொள்ளுகிறான் இராகவன். 'அறம் அல்லவும் எய்தினால், அது செய்க என்று ஏவினால் நின்னுரை வேதம் எனக்கொடு" செய்வதே எனக்கு நீதி என்று அங்ே முடிவுக்கு வந்தான். அதாவது தான் விருப்பத்தோ மு , மனத்தோடு செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய நேரி.டால் குருவாகிய விசுவாமித்திரர் ஆணை வேதம்ாகிறது. இங்கேயும் இப்படித்தான். பரதனுக்கு உரியது என்று உணர்ந்தாலும் முழுமனத்தோடு அரசை ஏற்கத் தான் விரும்பாவிட்டாலும் 6: