பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusй — «әФ ~Qрёлшй иптіъюви –әзу. «Rofisитеosйі 502 இராமனும் இலக்குவனும் இணைந்து நின்று போரை நடத்தினார்கள். “இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னை குமைத்தொழில் புரிந்தவீரர் தனுத்தொழில் குறித்து இன்று எம்மால் அமைப்பது என்? பிறிதொன்றுண்டோ? மேரு என்று அமைந்த வில்லால், உமைக்கொருபாகன் எய்த புரங்களின் ஒருங்கிவிழ்ந்த என்று இராம, இலக்குவர்கள் நடத்திய போரினால் இராக்கதப்படைக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். இந்தக் கடும் சேதத்தைக் கண்டு இந்திரசித்தனே திகைப்படைகிறான். “செய்கின்றார் இருவர் வெம்போர், சிதைக் கின்ற சேனை நோக்கின் ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று வைகின்றார் அல்லர் ஆக வரிசிலை வல த்தால் மாள எய்கின்றார் அல்லர் ஈது எவ் இந்திர சாலம்” என்றான். இவ்வாறு திகைத்த இந்திரசித்தன் தன்னைச் சமாளித்துக் கொண்டு வலுவாக நின்று இருவரையும் எதிர்த்து நின்று இருவரும் சேர்ந்து என்னிடம் போருக்கு வருகிறீர்களா அல்லது தனித்தனியாக வந்து எனது வில்லுக்குப் பலியாக விருப்பமா எனக்கேட்டுச் சக்தி ஆயுதங்களைத் தொடுத்துப் போரிட்டான். "இருவிர் என்னோட பொருதிரோ? அன்று எனின் ஏற்ற ஒருவர் வந்து உயிர்தருதிரோ? உம்படையோடும்