பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. sinugolin effélugpili 475 கொற்றமா மகுடம் புனைந்து அரசளித்து கூட உண்டு உரிய தம்பியரும் சுற்றமானவரும் போற்றத் தோற்றமும் ஏற்ற மும் அளித்தான்” “மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே மாசறத்திகழும் ஏகாந்த இடந்தனில் நான் அயர்ந்திருப்ப எடுக்கவோ கோக்கவோ என்றான் திடம் படுத்திடவே ராஜ ராஜனுக்குச் செரு முனை சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப்பதே எனக் கினிக் கருமமும் தருமமும் என்றான்.” என்று கருணன் கூறியதை வில்லிபுத்துரார் குறிப்பிடுவதும் இங்கு நினைவு கூறத் தக்கதாகும். "நமக்கு உணவூட்டி நெடிது நாள் வளர்த்து போர்க்கோலம் செய்து விட்ட பின்னர், அதில் தருமம் அதருமம் என்று பாராமல், எனது கடமையைச் செய்தலே, செய்து உயிர் கொடுத்தலே எனக்கு மேலானதாகும்” என்று கும்பகருணன் கூறியதைக் கம்பன் மிகவும் நுட்பமாக எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். இன்னும், இராவணன், மூவுலகையும் ஆண்ட புகழ் பெற்ற மாமன்னன். அந்தப் பெருமன்னன் தனது சேனையோடும் கிளைகளோடும் தனது தம்பிகள் இல்லாமல் தன்னந்தனியே மண் மீது மாண்டு கிடப்பதா, அது எப்படி சரியாகும், என்றும் கும்பகருணன் கூறுகிறான். “தும்பி அம்தொடை யல் வீரன் சுடுகணை துரப்பச் சுற்றும் வெம்பு வெம் சேனையோடும் வேறுள கிளைளு ரோடும் உம்பரும் பிறரும் காண ஒருவன் மூவுலகை ஆண்டான்