பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт — бәсъ годалилд штівәви —=у. Збойылғайт 134 எல்லா வசதிகளும் செல்வங்களும், வல்லமையும், வாய்ப்புகளும், வரங்களும், ஆயுத பலமும், ஆடம்பர வாழ்வும் பெற்றிருந்த இலங்கை வேந்தனை, அவன் அறம் வழுவி, ஆட்சி தவறிய காரணத்தால், _ நாட்டையிழந்து அரசை இழந்து, ನ್ದಿಅ। சென்று தாரத்தை இழந்து, பாதசாரிகளாய், வானரப்படையின் துணை கொண்டு சாதாரண மனித வடிவில் சென்று) தனது அறத்தின் வலிமையால் வெற்றி கொண்டதைக் கூறும் கத்ையை மானுடத்தின் வெற்றியாகக் கம்பன் சித்தரித்திருப்பது மிக அருமையான இலக்கியமாகும். மனித சக்தியையும் தெய்வச் சக்தியையும் இணைத்த மானுடத்தின் சிறப்பை வெளிப்படுத்தியிருப்பது கம்பநாடாரின் சிறப்பாகும். கம்பனுடைய தமிழின் சிறப்பாகும். கம்பன் என்றொரு மானிடன் என்று பாரதி குறிப்படுவது பெருமைக்குரியதாகும். ஒன்றிணைந்த மானுடத்வத் தத்துவ நெறியைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்.