பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |60 . துறந்த மாதவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் . தாய்ப்பசி உழந்துயிர் தளரத்தான் தனிப் பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவி . நாயகன் பட நடந்தவன் . நன்னெறியின் நீங்கலாத் துரயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோம் உடை ஆயவர், ஆகியோர் போல் நற்கதியின்றி நரகம் அடைவேன் என்று பலவாறு கூறி அழுது விம்மினான் என்று கம்பர் அற்புதமான அரசியல் மற்றும் சமுதாய நீதிநெறிக் கருத்துக்களை பரதன் மூலம் முன் வைக்கிறார். இங்கு பரதன் மிக உயர்ந்த வடிவில் சகோதர பாசத்தைக் காட்டுகிறான். தனது அண்ணனுக்குத் தீங்கிழைக்கக் காரணமானவன் என்று மனம் பதறுகிறான். சமுதாயத்திற்குத் தீங்கான பல இழி செயல்களைச் சுட்டிக்காட்டி அத்தகைய இழி செயல் செய்வோன் நற்கதியடைய மாட்டான் என எடுத்துக் காட்டித் தன்னைப் பழித்துக் கொள்கிறான். பரதனின் இந்த மிக உயர்ந்த பண்பட்ட நிலையைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். பரதன். இப்படிப் பலவாறு புலம்பி அழுகிறான்,வசிட்டனும் இதர அமைச்சர்களும் அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களை எடுத்துக் கூறுகிறார்கள். தசரதன் உடலை முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கான கடமைகளைப் பரதன் செய்து முடிக்கிறான். துக்கம் கொண்டாட வேண்டிய நாட்களும் முடிந்தன. அரசப்பொருப்பை ஏற்கும்படி வசிட்டனும் இதர அமைச்சர்களும் மற்றவர்களும், "மந்திரச் கிழவரும் நகர மாந்தரும் தந்திரத் தலைவரும் தரணி பாலரும் அந்தர முடிவரோடு அறிஞர் யாவரும் சுந்தரக் குரசிலை மரபின் சுற்றினர்.” முதலிய அனைவரும் பரதனைச் சுற்றி நின்று “காக்குதி உலகு, நின்கடன் அதாம்” என்று எடுத்துக் கூறினர். பலவேறு