பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 182 கதையின் அடுத்த கட்டத்தில், இராமன் காட்டில் இருந்த போது, பரதன் அவனைத் தேடி வந்த போது, இலக்குவன் அப்பரதன் மீது அவன் படையுடன் வந்துள்ளான் என்று கருதி தொடக்கத்தில் ஆத்திரமும் கோபமும் கொண்டு சீறினான். சுக்கிரீவன் ஒப்பந்தப்படி உரிய காலத்தில் வரவில்லை என்ற போதும் இலக்குவன் அடங்காத கோபம் கொண்டு சீறினான். இராமன் அவனை அமைதிப் படுத்தினான். போர்க்களத்தில் ஏற்படும் கோபம் இயல்பானது. இவையனைத்திலும் இலக்குவனிடம் சகோதரக் கடமையுணர்வும் இராம பக்தியும் பாசமும் மிகுந்து முன் வருவதைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். இராமனுக்கு அரசு இல்லையென்று கைகேயி சொல்லைக் கேட்டுத் தசரத மன்னன் கட்டுண்டான் என்பதைக் கேள்விப்பட்டவுடன் இலக்குவன் “பெண் நாட்டம் ஒட்டேன்” என்று தனது தந்தையின் நிலையைச் சாடிப் பேசுகிறான். இராமன் இலக்குவனிடம் “ஏன் இத்தனை சீற்றம் கொள்கிறாய்?’ என்று அமைதியாகக் கேட்கிறான். ‘மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கை யானை என் அத்த! என் நீ இமை யோரை முனிந்திலாதாய் சன்னத்தனாகித் தனு ஏந்து தற்கு ஏது என்றான்” இலக்குவனுடைய சீற்றக்கனல் வேகம் மிக்க மின்னலைப் போல இருந்ததாம். மின்னலைப் போன்ற வேகமான சீற்றக்கனல் விட்டு விளங்கிய பொன்னைப் போன்ற மேனியும் புயலைப் போன்ற கைகளையும் கொண்ட இலக்குவனை என் அப்பனே ஏன் இவ்வளவு கோபங் கொள்கிறாய். இத்தனை கோபங் கொண்டு வில்லை ஏந்திக் கொண்டு சண்டைக்குத் தயாராவது எதற்கு? என்று மிகவும் அமைதியாகவும் இராமன் கேட்கிறான். அதற்கு இலக்குவன் கூறும் பதில் மிகவும் கடுமையானது. "மெய்யைச் சிதைவித்து நின்மேல் முறை நீத்த நெஞ்சம் மையின் கரியாள் எதிர் நின்னை அம் மெளலி சூட்டல் செய்யக் கருதித் தடை செய் குனர் தேவரேனும் துய்யைச் சுடுவெம் கனலில் சுடுவான் துணிந்தேன்”