பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйпойт –390), «адемтип, топтом – су, «300» телойт |84) பரதன் பெறுவான், இனியான் படைக்கின்ற செல்வம் விரதம், இதின் நல்லது வேறு இனியாவது? என்றான்” என்றும், “ஆன்றான் பகர்வான் பினும், ஐய இவ் வையம் மையல் தோன்றா நெறி வாழ் துணைத்தம் முனைப் போர் தொலைத்தோ! சான்றோர் புகழும் தனித்தாதையை வாகை கொண்டோ ! ஈன்றாளை வென்றோ ! இனி இக்கதம் தீர்வது” என்றும், 'நன்சொற்கள் தந்தாண்டு எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து எற்கு அரசாள்வது தக்கதென்றால் என் சொல் கடந்தால் உனக்கு யாதுளது ஈனம்? என்றான் தென் சொல் கடந்தான், வட சொற் கலைக்கும் எல்லை தேர்ந்தான்” என்றும் இராமன் உறுதியாக நின்று தெளிவாக அறிவுரையும் கூறியதைக் கம்பன் அழகாக எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார். இதைக் கேட்ட பின்னர் இலக்குவன் மேற்கொண்டு பேசவில்லை, பணிந்தான், சினம் தணிந்தான், சீற்றம் துறந்தான், எதிர் நின்று தெரிந்து சொல்லும் மாற்றம் துறந்தான், இராமனுடைய ஆணையினால் அடங்கி நின்றான். “சீற்றம் துறந்தான், எதிர் நின்று தெரிந்து செப்பும் மாற்றம் துறந்தான் மறைநான் கென வாங்கல் செல்லா