பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதராகளும் 262 “உலகத்தின் ஆட்சியை இந்திரனுக்குக் கொடுத்து விட்டாய். உனது ஆட்சி அதிகாரத்தையும் உனது கிளைகளையும் கெடுத்து விட்டாய். உன்னையும் அழித்துக் கொண்டாய். எல்லா தேவர்களும் விடுதலை பெற்று விட்டனர். இனிவேறு வழியுமில்லை. தர்மமே உனக்கு பயந்து ஒளிந்து கொண்டு விட்டது. அந்த அறத்தின் வழியில் நின்று முன்பு நீ வருந்திப் பல தவங்கள் புரிந்ததால் உனக்குப் பெருமை உண்டாகும்படி அத்தவங்கள் உனக்கு வலிமையும் செல்வமும் கொடுத்தன. இப்போது அவற்றை யெல்லாம் நீக்கிக் கொண்டு விட்டாய். நாம் இறந்து விட்டால் அப்போது இங்கு உனது ஆணையை நிலை நிறுத்துவதற்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் மிகுந்த கவலை கொண்டு அண்ணன் மீது பரிவு கொண்டு பேசுகிறான். “கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும் கெடுத்தனை நின்பெறும் கிளையும் நின்னையும் படுத்தனை பல்வகை அமரர் தங்களை விடுத்தனை வேறு இனி விடும் இல்லை” எனவும் 'அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் திறம் முனம் உழைத்தலின் வலியும் செல்வமும் நிறம் உனக்கு அளித்தது, இங்கு அதனை நீக்கினாய் இறவின் இங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்? என்றும் கம்பனுடைய கவிதைகள் குறிப்பிடுகின்றன. அந்த இராமபிரான் தஞ்சமளிப்பவர். தருமமாக நடப்பவர், பெருமை உள்ளவர், நல்ல உள்ளமும், செயல்பாடும் உள்ளவர், வஞ்சமும் பாவமும் பொய்யும் நிறைந்த நாம் என்ன செய்ய முடியும்? அவர்களுடைய நல்ல குணங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. அந்தச் சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்களிடம் சரணடைந்து ஐயத்திற்கு இடமில்லாமல் தம்பி வீடணனுடன் சேர்ந்து கொள்வது உய்வதற்குரிய வழியாகும். அது முடியரவிட்டால் வேறு என்ன வழி? நமது படைகளைச் சிறுகச் சிறுக போர்க்களத்தில் விட்டு அவை மடிவதைக் கண்டு நாம் தேம்பித் தேம்பி அழ வேண்டியதுதான். அது நல்ல சிந்திக்கத் தக்க செயல் அல்ல. நமது