பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பாவை-அ-சீனிவாசன் 2لیجئے இலங்கை ஆகிய மூன்று இடங்களிலும் எழுந்து அதனால் வாதங்களும் மோதல்களும் ஏற்பட்டு முடிவு காணப் பட்டிருக்கின்றன. மன்னராட்சியில் பரம்பரை உரிமையினடிப்படையில் மூத்தவனுக்குப் பட்டம் என்பது உலகம் முழுவதிலும் ஒரு மரபாக நிலைபெற்று பழக்கத்தில் வந்திருக்கிறது. ஆயினும் அதில் பல பிரச்சனைகளும் எழுந்து மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இராமாயணக் கதையில் அயோத்தியில் தசரதன் முதுமை அடைந்து விட்டதால், அவனுடைய குமாரர்களில் மூத்தவனுக்கு அரசுப் பட்டம் சூட்ட வேண்டுமென்று ஏற்பாடு செய்யப் பட்டது. ஆயினும் அதில் தடை ஏற்பட்டு இளையவன் பரதனுக்கு நாடு என்றும் மூத்தவன் இராமனுக்கு காடு என்றும் நிகழ்ந்து விட்டது. கிட்கிந்தையில் மூத்தவன் கொல்லப்பட்டு இளையவனுக்கு ஆட்சி அமைகிறது. இலங்கையில் மூவரில் மூத்த இருவரும் போரில் கொல்லப் பட்டு இளையவனுக்கு ஆட்சிப் பொறுப்பு ஏற்படுகிறது. எனவே மூத்தவன் என்பது மட்டுமல்ல, செல்வாக்குள்ளவன், நல்லவன், வல்லமையுள்ளவன், நல்ல துணையுள்ளவன், அறநெறியில் நிற்பவன், நல்ல அமைச்சும் ஆதரவும் உள்ளவன், என்னும் சாதகமான நிலைகளும் எழுகின்றன. அவையெல்லாம் இராமாயணப் பெருங் கதையில் பேசப் படுகின்றன. இதே போல மகாபாரதப் பெருங் கதையிலும் இத்தகைய கருத்து மோதல்கள் வலுவாக ஏற்பட்டன. திருதராட்டிரன் மூத்தவன், ஆயினும் கண் பார்வையில்லாதவன். அதனால் இளையவனான பாண்டுவுக்கு அரசப் பட்டமும் ஆட்சிப் பொறுப்பும் கொடுக்கப் படுகிறது. பாண்டுவும் பட்டம் பெற்ற சில ஆண்டுகளில் இறந்து விட்டான். வேறு வழியின்றி திருதராட்டிரனே மன்னர் பொறுப்பிலிருந்து ஆட்சி நடத்துகிறான். ஆயினும் அடுத்தாற் போல இளவரசுப் பட்டம் யாருக்கு என்பது பிரச்சனையாகி விட்டது. மூத்தவனான திருதராட்டிரனுடைய மூத்தமகன் துரியோதனனுக்கா அல்லது கூட்டுக் குடும்பத்தின் மொத்தமான பிள்ளைகளில் மூத்தவனான - (பாண்டுவின் மூத்த பிள்ளையான) யுதிட்டிரனுக்கா என்பது தகராறுக்குரிய தாவாவுக்குரிய பிரச்சனையாகி விட்டது. துரியோதனன், யுதிட்டிரன் ஆகிய இரு தலைமைகளில் மரபு நெறிப் படி யாருக்கு அரசுரிமை. வல்லவர்கள், நல்லவர்கள், அறநெறியில் நிற்பவர்கள், துணை பலம் இருப்பவர்கள் என்ற முறையில் யாரிடம்