பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சிக்னிவாசன் 23 மற்றொரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர் கொண்ட நமது முன்னோர்களைப் பின்பற்றுவது போல. “கங்கையிலும் காவிரியிலும் தாகத்துக்குத் தண்ணிர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆறுகள் குடிதண்ணிர் சாதனங்கள் மட்டுமல்ல. அவை ஜீவநதிகள், வணங்க வேண்டிய தெய்வங்கள்’. இந்த உரையாடல் நிகழ்ந்தது 1956-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதியென்று திரு.மீ.ப.சோமசந்தரம் அவர்கள் அந்தக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் காலத்தில் தமிழகத்தில் இராமாயணம் பற்றியும் குறிப்பாகக் கம்பனைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ராஜாஜி அவர்களின் கருத்து அந்நூலின் குறிப்பில் முன்னுரையாக வந்திருந்தது. தமது ஆழ்ந்த கவனத்திற்குரியதாகவும் மிக்க ஆறுதலளிப்பதாகவுமிருந்தது. அந்த நேரத்தில் இராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தித் திருமகன் நூல் மலிவுப் பதிப்பாக ஒரு ரூபாய் விலையில் வெளிவந்தது. ஒரு லட்சம் பிரதிகள் அப்பதிப்பு விற்பனையானதாகத் தகவல். அதுவும் அந்த நேரத்தில் நமக்கு மி கவும் ஆறுதலளித்த செய்தியாகும். எங்கே இராமாயண நூல்கள் எரிக்கப் பட்டு அந்தப் புனிதமான நூல் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருந்த காலத்தில் இராஜாஜி அவர்களுடைய நூல் தமிழக மக்களிடம் லட்சக்கணக்கில் சென்றது தமிழ் மக்கள் செய்த தவப் பயனாகும். இராஜாஜி அவர்களுக்கு என்றென்றும் நன்றி செலுத்துவதற்கு தமிழ் மக்கள், தமிழ் கூறும் நல்லுலகத்தார் மிகவும் கடமைப் பட்டிருக்கிறார்கள். நாமும் அந்த மூதறிஞருக்கு நன்றி செலுத்துவோமாக. இன்னும் தமிழகத்தில் இராமாயணக் கதையைப் பற்றி, அது ஒரு ஆரிய நூல் என்றும், திராவிடர்களை இழிவு படுத்தும் நூல்லென்றும், இராமன் ஆரியன் என்றும், இராவணன் திராவிடன் என்றும் கருத்துக்கள் முன் வைக்கப் பட்டு விவாதிக்கப் பட்டுள்ளன. கம்பன் இராமனைப் புகழ்ந்து, இராமாயணக் கதையை வைத்துத் தனது காவியத்தைப் பாடியதால் அவன் தமிழினத்திற்கும் திராவிட இனத்திற்கும் துரோகம் செய்துள்ளானென்றும், அந்த இராமாயணத்தைப் படிக்கலாமாவென்றும், அதை எரிக்க வேண்டுமென்றும், இராமாயணமா கீமாயணமா வென்றும், கம்பரசமா