பக்கம்:கம்பன் கலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ம் கம்பன் கலை சுலபமான காரியமன்று என்றும், இன்னும் சொல்லப் போனால் ஓரளவு முடியாது என்றுங் கூடச் சொல்லமுடியும். அப்படி அடக்கமுடியாத இந்தப் பொறி புலன்களை அடக்குபவன் மனிதனுள்ளே உயர்ந்தவ னாகிறான். 'செயற்கரிய செய்வர் பெரியர் என்றார் வள்ளுவர். அடக்க முடியாத பொருளை வைத்து அடக்குகின்றானே, அவன் செயற்கரிய செய்தவன் ஆகிறான். ஒரு புலனைக்கூட அடக்க முடியாத நம்போன்றல்லாது வாழ்வில் இருந்து கொண்டே ஐந்துபுலன்களையும் அடக்குகின்றானே அவன் செயற்கு அரிய செய்பவன் ஆகின்றான். அவ்வாறு செயற்கரிய செய்தவர்கள் பலர் கம்பனின் பெருங் காப்பியத்திலே காட்சி அளிக்கின்றார்கள். அந்த அரிய காரியத்தை, அதாவது, செயற்கரியனவற்றைச் செய்கலாதவர்கள் இருக்கின்றார்களே அவர்களும் இதில் காட்சி அளிக்கிறார்கள். ஒரு பெருங் காப்பியத்தை எடுத்துப் பார்க்கவேண்டுமேயானால், அதனுடைய பிண்டப் பொருள் யாது என்று ஆராயவேண்டும். மரபுபற்றி வருணிக்கப்பெறும் ஆற்றுப்படலங்கூட இக்கருத்தைத் தாங்கி நிற்கின்றது. அதிலும் இவனுடைய முதற் பாட்டே புலனடக்கப் பெருமை பேசுகிறது. ஆறு என்றவுடன் நீர் ஒடுகிற ஆற்றை மட்டும் கருதக்கூடாது. ஆறு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? வழி என்பது பொருள். நீர் ஒடும் ஆற்றுக்குப் பெயரும் இது வழியாகத்தான் வந்தது. நீர் செல்லுகின்ற வழியாதலாலே இது ஆறு என்று சொல்லப்பட்டது. சொல்லப்போனால் யாறு என்ற சொல்தான் ஆறு என்றாயிற்று. வழி என்ற பொருளை யுடைய ஆறு என்ற சொல்லையே. இங்குக் கவிஞன் கையாளுகிறான். இந்தப் பெருங்காப்பியம் எந்த வழியைப் பின்பற்றிச் செல்லுகிறது என்பதைக் கூறுகிறான். கோசல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/110&oldid=770619" இலிருந்து மீள்விக்கப்பட்டது