பக்கம்:கம்பன் கலை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கம்பன் கலை மின்வயின் மருங்குல் கொண்டாள், வேய்வயின் மென்தோள் கொண்டாள், பொன்வயின் மேனி கொண்டான் பொருட்டினால் புகுந்தது இப்பொழுதுக.ட இராவணன் அதிக வியப்பைக் காட்டினதாகத் தெரியவில்லை. 'ஆர் அவள்?' என்றுதான் கேட்கிறாள். இந்த இடத்தில் யார் இருப்பினும் 'ஆர் அவள்? என்று கேட்கத்தான் செய்வார்கள். எனவே இதில் வியப்பு ஒன்றும் இல்லை. உடனே சூர்ப்பணகை அவள் பெயர் சீதை என்று கூறி விட்டு ஏழு பாடல்களில் பிராட்டியை வருணிக்கின்றாள். இறுதியாகப் பாற்கடலைக் கடைந்த பொழுது இலக்குமி வெளிப்பட்டாள். கடலுடன் முரணிய பூமி இதற்குப் போட்டியாகப் பிராட்டியைத் தான் தந்தது என்றாள். இதற்கு மேல்தான் சூர்ப்பனகை இராவணன் மனநிலையை நன்கு அறிந்துகொண்டு அதற்குத் தூபம் போடுகிறாள். அதிகாமம் உடையவன் இராவணன். அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறம் பெறாதனவற்றை விரும்பும் இயல்புள்ளவன் அவன். மேலும் எல்லை யில்லாத ஆணவம் உடையவன். இவை இரண்டிற்கும் தீனி போடுகிறாள் அவன் தங்கை "ஒருபது முகமும், கண்ணும் உருவமும், மார்பும், தோள்கள், இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய்' . (சூர். சூழ். 80) என்று கூறுவதால் பிறரைப் போல் அல்லாமல் இருபது கண்கள் இருபது தோள்கள் பெற்ற பயன் சீதையைப் பெறுவதால்தான் நிறைவேறும் என்று தூபம் போடுகிறாள். இதனால் அவனுடைய அதிகாமத்திற்கு இரை வகுத்தாயிற்று. அடுத்து அவனுடைய அகங்காரத்தை உசுப்பி விடுகிறாள் தங்கை "இத்தகைய பெண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/201&oldid=770719" இலிருந்து மீள்விக்கப்பட்டது