பக்கம்:கம்பன் கலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ) கம்பன் கலை வாலியோ அந்த இராவணனை வாலினாற் கட்டுகிறவன்; எனவே கரன், கவந்தன் முதலானோரை வென்றவன் வாலியை வெல்ல முடியும் என்ற வாதம் எடுபடாது. மேலும், "கிட்டுவார் பொரக்கிடைக்கின், பட்ட நல்வலம் பாகம் எய்துவான்" வாலி நட்பு-40. இதுவரை இராமனால் வெல்லப்பட்ட யாருக்கும் இத்தகைய வரபலம் இருந்ததில்லை. எனவே, சுக்கிரீவனுடைய சந்தேகம் முழுதும் ஆதாரமற்றது என்று கூறிவிட முடியாது. வரபலமுடைய வாலியை வெல்ல வேறு வரபலம் உடையவர்களால் இயலாது. ஆனால் வரங்களையே தந்த இறைவனால் உறுதியாக அவனை வெல்லமுடியுமன்றோ? எனவேதான், நான்கு பாடல்களில், இராமன் மூவர்க்கும் மேம்பட்ட மூலப்பொருள் என்பதை விரிவாகச் சான்று காட்டி விளக்குகிறான் அஞ்சனை சிறுவன். இதிலும் ஒர் இடையூறு ஏற்படுகிறது. பரம் பொருளை அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிதல் இயலாத காரியம். ஆனால், உணர்வின் உதவிகொண்டு உணரலாம். மாபெரும் அறிஞனாகிய அனுமன் இதை அறியாதவ்னா? எனவேதான், வந்தவன் மூலப் பரம் பொருள் என்பதைத் தன் உணர்வுமூலம் உணர்ந்ததைக் கூறுகிறான். "சங்கு சக்கரக் குறிஉள, தடக்கையில் தாளில் எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை" - - (நட்பு-74) என்ற இப்பாடலால் இராமன் மூலப் பரம் பொருள் என்பதை காட்சிப் பிரமாணத்தால் அனுவதிக்கத் தொடங்குகிறான். இராமன் சிவதனுசை ஒடித்ததைக் கேள்விப்பட்டிருந்தான் ஆதலின், அதை எடுத்துக் கூறுகிறான். சிவதனுசை ஒடிப்பவன் மூலப் பரம் பொருளாகத்தான் இருக்க முடியும் என்பது அனுமானப் பிரமாணமாகும். இனி, அடுத்துத் தன் தந்தையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/51&oldid=770788" இலிருந்து மீள்விக்கப்பட்டது