இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
17
- முட்டில் அட்டில்
- முழங்குற வாக்கிய
- நெட்டுலை கழு நீர்
- நெடு நீத்தந்தான்
- பட்டு மென் கமுகு
- ஓங்கு படப்பை போய்
- நட்ட செந் நெலின்
- நாறு வளர்க்கும்.
- முட்டில் அட்டில்
என்று பாடியிருக்கிறீர்களே. அது இந்தக் கழுநீர்வயலை நினைந்துதானே?
கம்பன் – சரி. அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளேன். இத்துடன் நான் பிறந்த ஊரில் ஒரு அதிசயம் தெரியுமா! நாட்டில் எல்லாம் சமயச் சண்டை மலிந்திருந்த காலத்து, எங்கள் ஊரிலே கோயில் கொண்டுள்ள சிவனும் விஷ்ணுவும் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி நிற்கிறார்களே தெரியுமா? வேதபுரீஸ்வரரும் ஆமருவியப்பரும் அப்படி நிற்கும் கோலமே
- அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்
- என்றுரைக்கும் அறிவிலார்க் கெல்லாம்
ஒரு சூடு இல்லையா? வேதபுரஸ்வரனை வணங்கியவர்கள் எல்லாம்
- வேதங்கள் அறைகின்ற உலகெங்கும்
- விரிந்தன உன்
- பாதங்கள் இவை என்னில்
- படிவங்கள் எப்படியோ!
- வேதங்கள் அறைகின்ற உலகெங்கும்
என்றுதானே பாடினார்கள்.
- தாய்தன்னை அறியாத கன்றில்லை
- தன் கன்றை,
- தாய்தன்னை அறியாத கன்றில்லை