பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 அ. ச. ஞானசம்பந்தன்

 வாழ்வின் வேராய் இருப்பவர்கள் பெண்களே. வெளிக்குத் தெரியாமல் மரத்தின் வளர்ச்சிக்கு உதவுவது வேர் அன்றோ? அதேபோல, ஆண் மக்களின் வாழ்வு செழிக்க வீட்டினுள் இருந்து உதவுபவர் பெண்டிரேயாகலின், அவர்களை முன்னர்க் காண்போம். கம்பராமாயணத்தின் முதற்செய்யுளில் இக்கருத்தைக் கவிஞன் பேசுகிறான்; கோசல நாட்டுப் பெண்டிர் ஆடவர் என்ற இருபாலாரின் பண்பாட்டைப் பேசுகிறான். பண்பாடு என்பது ஒரு சாராரிடத்தில் மட்டும் இருந்து பயன் இல்லை, எனவே, காப்பியத்தின் முதற்செய்யுளில் இக்கருத்தைப் பேசுவதால், மக்கள் பண்புடையவர்களாய் வாழ வேண்டும் என்பதில் கவிஞன் எத்துணைக் கருத்துடையவன் என்பது விளங்கும்.

ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ்செலாக்

கோச லம்புனை நாட்டணி கூறுவாம்

(12)

(துன்பத்திற்கு ஏதுவான குற்றங்களைச் செய்யும் ஐம்பொறிகளும், பெண்களின் கண்களும் தவறான வழியில் செல்லாத கோசலம்.)

என்ற கவிதையால், ஆண்மக்களுடைய ஐம்பொறிகளும் மகளிரின் கண்ணாகிய பொறியும் நன்னெறியினின்றும் பிறழாத கோசலநாடு’ என்று கூறுகிறான்; இதிலும் ஒரு சிறப்புத் தந்தே பேசுகின்றான். ஆசு அவம் புரி என்றதால், துன்பத்திற்கேதுவான குற்றத்தைச் செய்யும் இயல்புடையனவாகிய ஐந்து பொறிகளும் என்கிறான். இவ்வைந்து பொறிகளும் (உடம்பு, வாய், கண், மூக்கு, செவி) குற்றம் செய்யும் இயல்புடையனவாயினும், இவற்றை அவ்வாடவர்கள் அடக்கி ஆளும் திறம் கூறப்பட்டது காண்க. ஆடவர் குற்றம் நீங்கின பண்பாட்டை உடையவர் என்று கூறிய கவிஞன்,