பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 O அ. ச. ஞானசம்பந்தன் விதமான கல்வியைப் பெறுகின்றனர். ஆனால், இம்முறை சிறந்ததன்று எனவும், பெண்டிருக்கென்று தனி முறைக் கல்வி இருத்தல் வேண்டும் எனவும் கூறுகிறவர் இன்றுண்டு. ஆனால், அன்றே கம்பநாடன் இதுபற்றிக் கூறியுள்ளான். பொருந்திய செல்வமும் பொருந்திய கல்வியும்' பெற்றிருந்தார்களாம் கோசலநாட்டுப் பெண்கள். 'பொருந்து கல்வி' என்றமையால், அவர்கள் வாழ்க்கை சிறப்புறுதற்குரிய கல்வியைப் பெற்றுத் திகழ்ந்தார்கள் என்பதை அறிகிறோம். மேலும், பொருந்து கல்வி' என்றமையின், அவர்களிடம் சேர்ந்தமையினாலேதான் அக்கல்வி கூட விளக்கம் அடைந்தது என்றும் கவிஞன் தெரிவித்து விடுகிறான். சிலரிடம் அமைந்திருப்பதால் சில பொருள்கள் சிறப்பை அடைகின்றன. அது போலத் தானே சிறக்கும் இயல்புடைய கல்வி அம்மங்கையரை அடைந்தமையின் மேலுஞ் சிறப்பை அடைந்தது என்னுங் கருத்தும் உள்ளடங்கவே பொருந்து கல்வி என்று ஆசிரியன் கூறுகிறான். இனிப் பாடலைப் பார்ப்போம்: பெருந்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே? (67) இப்பாடலால் கவிஞன் அப்பெண்கள் பெற்ற கல்வி, பண்பாட்டைத் தரும் கல்வி என்ற கருத்தைக் கூறி விட்டான். "அந்நாட்டு மகளிரிடத்து விருந்தினரை உபசரிக்கும் செயலும், வறுமையால் உதவி வேண்டி வந்தவர்க்கு ஈதலும் அல்லாமல் வேறு என்ன தொழில்கள் இருந்தன? என்கிறான் கவிஞன். ஆம்! இந்த இரு செயல் களும் பண்பாட்டின் தலையாய வெளிப்பாடு அல்லவா? இவற்றை அவர்கள் செய்கிறார்கள் எனின், இப் பண்பாட்டை எங்கிருந்து பெற்றார்கள்? பொருத்தமான