பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

257



அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது இருந்ததால் அதனை எடுத்து உரைத்தாள்.

“எந்தத் தாயை அவன் உயிரினும் மேலாக நேசித்தானோ அவளே அவன் வாழ்வுக்கு உலை வைத் தாள்” என்பதை நாகரிகமாய்ச் சுட்டிக் காட்டினாள்.

கணையாழியைக் கொடுத்த இராமனுக்கு அதற்கு இணையாய்த் தன் தலையில் குடியிருந்த சூடாமணியை எடுத்து அவனிடம் தந்தாள்.

“இது எங்கள் மணநாளை நினைவுபடுத்தும் அடையாளம்” என்றாள்.

துகிலில் முடித்து வைத்திருந்த அந்நகையை அவனிடம் தந்து, விடை தந்து அனுப்பி வைத்தாள்.

அனுமன் சீற்றம்

நெருப்போடு விளையாடிய இராவணுனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்; ‘மானிடர் இருவர், என்று மதித்து இடர்விளைவித்த இராவணன், அவர்தம் ஆற்றலை அறியவேண்டும், என்று விரும்பினான் அனுமன்.

‘சீதை இருந்த சோலை அது அவளுக்கு நிழலைத் தந்தாலும், அது சிறையாக இருப்பதை வெறுத்தான்; அப்பொழிலில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். அவற்றை விண்ணில் எறிந்து வீடுகளில் விழச் செய்தான்.

ஊருக்குள் நுழைந்தான்; விண்ணை முட்டும் மாடங்களை எரியிட்டுக் கொளுத்தினான்; யானை, குதிரை,