பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் Ꮾ5 'கூலத்தார் உலகம் எல்லாம் குளிர்ப் பொடு வெதுப்பு நீங்க, நீலத்தார் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே; காலத்தால் வருவது ஒன்றோ! காமத்தால் கனலும் வெந்திச் சீலத்தால் அவிவது அன்றிச் செய்யத்தான் ஆவது உண்டோ? என்பது கம்பனுடைய கருத்து நிறைந்த பாடல்களில் ஒன்று. கடல் சூழ்ந்த உலகமெல்லாம் காற்றால், மழையால், பணியால், வெப்பம் தணிந்துச் செழுப்படைகிறது. ஆனால் அரக்கன் உள்ளத்தில் எழுந்த காமத் தீ பருவகால நிகழ்ச்சிகளால் தணியவில்லை. தென்றல் காற்றாலும், சாரல் மழையாலும், குளிர்ந்த பணியாலும் அவனுடைய வெப்பத்தைத் தணிக்க முடியவில்லை. நெய் இல்லாமலேயே அவனுடைய மேனி எரிந்து கொண்டிருந்தது. காமத்தால் சுடுகின்றன. வெம்மை மிக்க நெருப்பின் வேகத்தைக் காலத்தால் குறைக்க முடியாது. சீலத்தால் தான் அவிக்க முடியும். வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று கம்பன் மிகவும் அற்புதமான ஒரு கருத்துச் செறிவை இங்கு காட்டுகிறார். காமத்தால் எற்படும் வெப்பத்தைச் சீலத்தால் தான் வெல்ல முடியும் என்று மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். மற்றொரு அற்புதமான காட்சியைக் கம்பர் காட்டுகிறார். பெளர்ணமியின் முழுநிலவு தோன்றியது அந்த நிலவைக் கண்டு தனது துன்பம் நீங்காதவனாய் ‘'தேயா நின்றாய் மெய் வெளுத்தாய், உள்ளம் கருத்தாய், நிலைதிரிந்து காயா நின்றாய், ஒரு நீயும்; கண்டார் சொல்லக் கேட்டாயோ! பாயா நின்ற மலர் வாளி பறியா நின்றார் இன்மையால் ஓயா நின்றேன்! உயிர் காத்தற்கு உரியார் பாவர் உடுபதியே’’ என்று இராவணன் காம நோயால் துன்புற்று முழுநிலவுடன் பேசுவதைக் கம்பன் மிகவும் அழகாகக் குறிப்பிடுகிறார். முழுநிலவும் தேய்ந்து இருள்வராதோ என்று ஏங்குகிறான். எனவே அடுத்து சூரியனையும் பகலையும் வருக என்றான். அவை வந்தன. அரக்கனின் துன்பம் தணியவில்லை. இளம்பிறையைக் கொண்டு வரச் சொன்னான். ஆயினும் அவன் ஆறுதல் பெறவில்லை. அதன் பின்னர் கும்பிருள் வந்தது. அந்த இருளில் இராவணன் சீதையின்