பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 146 காதலும் பெருங்காதலும் 'இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது; அறத்தவரை அண்மும் விருந்தும் எனல் ஆகியது; வியும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி' என்றும் கம்பர் மிகவும் உருக்கமாக குறிப்பிடுகிறார். இன்னும், கணையாழியைப் பெற்றுக் கொண்ட போது சீதை எப்படியிருந்தாள் என்பது பற்றி அனுமன் இராமனிடம் கூறுகிறான். “வாங்கிய ஆழி தன்னை, வஞ்சர் ஊர் வந்தது ஆம் என்று ஆங்கு உயர் மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள், எய்த்த மேனி விங்கினள்; வியந்தது அல்லால் இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள்' மறு பக்கம் இராமன் சூளாமணியைப் பெற்ற போது, அவனுடைய அன்பு உள்ளம், காதல் உணர்வு உயர்ந்து பொங்கி, மெய் உற வெதும்பி உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான், என்றும் அந்த சூளாமணியைக் கையினால் பற்றிய போது இராமன் சீதையைக் கரம் பற்றிய உணர்வைப் பெற்றான் என்றும், இன்னும் பொடித்தன உரோமம்(உடம்பு புல்லரித்தது) போந்து பொழிந்தன கண்ணிர் (ஆனந்தக் கண்ணிர் பொங்கி வடிந்தது) பொங்கித் துடித்தன மார்பும் தோளும், தொன்றின வியர்வின் துள்ளி, மடித்தது மணவாய் ஆவிவருவது போவது போல் ஆகித்தடித்தது மேனி’ என்றும் கம்பநாடர் குறிப்பிடுகிறார். எத்தகைய அருமையான காட்சி? இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதில் சீதையின் உணர்வையும் இராமனுடைய இயல்பையும் யாரால் விவரிக்க முடியும் என்று கம்பனே கூறும் அளவிற்கு இருந்தது. இவ்வாறு இருவரையும் இணைத்த அனுமன் புகழ் ஓங்கி நிற்கிறது. அதைக் கம்பன் ‘'வேத நன்நூல் உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்’ என்று அருமையாகக் குறிப்பிடுகிறார். பலே! பலே!! இந்த அருமையான செய்தியைக் கேட்டு வானரப்படைத் துள்ளிக் குதித்தன. இலங்கையை நோக்கிச் செல்லும் ஒரே குறிக்கோளில் அனைவரும் இணைந்தனர். சுக்கிரீவன், உடனே புறப்படு என்று வானரப் படைகளுக்கு உத்தரவிட்டான். வானரப்படை கடலலை போல் ஆரவாரம் செய்து கொண்டு தென் திசையை நோக்கிக் கிளம்பியது.