பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 161 அவனுக்குத் தூதன் ஆதல் நிந்தனைக் குரியதல்லவா, நல்ல வேளையாக இங்கு என்னிடம் வந்தாய், மைந்த, “தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து இருகை, நாற்றிப் பேதையன் என்ன வாழ்ந்தாய்! என்பது ஒர் பிழையும் தீர்ப்பாய்! சீதையைப் பெற்றேன்! உன்னைச் சிறுவனும் ஆகப் பெற்றேன்; ஏது எனக்கு அரியது? என்றான் இறுதியின் எல்லை கண்டான்” மேலும் அந்த மனிதர்கள் இன்று நாளை அழியப் போகிறார்கள் உனது அரசை உனக்குத் தந்தேன். ஆளுதி ஊழி காலம். மன்னவனாக யானே உனக்கு மகுடம் சூட்டுவேன் என்றும் ஆசை வார்த்தை கூறினான். இந்த உரையாடலின் போது 'சீதையைப் பெற்றேன்’ என்று இராவணன் சீதையின் நினைவை விடவில்லை. இராவணன் கூறியதைக் கேட்டு அங்கதன் கை கொட்டிச் சிரித்து, "அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கித் துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான், இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி, உங்கள் பால் நின்றும் எம்பால் போந்தனன் உம்பி, என்றான்” “வாய்தரத்தக்க சொல்லி, என்னை உன் வசம்செய்வாயேல் ஆய்தரத் தக்கது அன்றோ? தூதுவந்து அரசது ஆள்கை, நீதரக் கொள்வேன் யானே, இதற்கு இனி நிகர்வேறு எண்ணின், நாய்தரக் கொள்ளும் சீயம் நல் அரசு’ என்று நக்கான்' என்று கூறி ஏளனமாகச் சிரித்தான். இராவணன் கோபம் அடைந்து வந்தது பகர்தி என்று கூறினான். அங்கதன் தான் வந்த காரியத்தை அறிவித்தான். “கூவியின்று என்னை நீ போய்த் தன்குலம் முழுதும் கொல்லும் பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானைத் தேவியை விடுக! அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன் கண் ஆவியை விடுக! என்றான் அருள் இனம் விடுகிலாதான்!”