பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 250 காதலும் பெருங்காதலும் காண ஆவல் கொண்டிருந்தனர். கற்பிலே சிறந்த மாதர்களெல்லாம் கோசலையின் முனதைப் போல் மகிழ்ச்சியடைந்திருந்தனர். வேதியர்களெல்லாம் வசிட்டனை ஒத்திருந்தனர். வேறுள மகளிர் எல்லாம் சீதையைப் போல் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அச் சீதை (திருவிளை திருமகளை) ஒத்திருந்தாள். அந்நகரின் நல்லொழுக்கம் மிக்க மக்கள் எல்லாம் தசரதனை ஒத்திருந்தார்கள். இதைக் ՑհԼՈԼ16ԾT, “மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்; வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறுள மகளிர் எல்லாம் சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள். அவ்வூர் சாதுவ மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்’ என்று குறிப்பிடுகிறார். இராமனுக்கு அரசு இல்லை இராமனுக்கு அரசு இல்லை என்றாகி விட்டது. கைகேயி இராமனைத் தன்னிடம் வரவழைத்தாள். 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இரு சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற் கொண்டு, பூழிவெம் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்' அதைக் கேட்ட இராமன் எவ்வித வேறுபாடும் மாறுபாடும் இன்றி ‘‘மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ?' என்று