பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 39 தசரத மன்னன் தரையில் வீழ்ந்து கிடந்தான். அதைக் கண்டவுடன் உயிர் நீங்கிய காலத்தில் உடல் விழுவதைப் போல கோசலையும் தரையில் வீழ்ந்தாள், அலறினாள். உலகின் தவமே, திருவின் திருவே, கலையின் கடலே, நெறியார் மறையின் நிலையே, கருணாலயனே, என்றெல்லாம் கூறி அழத் தொடங்கினாள். இராமனைக் காணாமல் அரசோர் திகைத்தனர். கோசலையின் அழுகுரல் கேட்டு வசிட்டன் வந்து கீழே விழுந்து கிடந்த அரசனைத் தூக்கி நிறுத்தி நடந்ததை அறிந்து அரசனுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினான். கோசலையின் அழுகுரல் வசிட்டன் தலையீடு இதைக் கண்டு கைகேயி வெறுப்புடன் கூடிய முகத் தோற்றத்தில் நின்றாள். கோசலையும் பரதன் நாடாளட்டும் இராமன் வனம் செல்ல வேண்டாம் என்று வேண்டினாள். வசிட்டனும் கைகேயியைப் பார்த்து இனி உன் புதல்வர்க்கு அரசும் ஏனையோர்க்கு உயிரும் மனுவின் வழி வந்த உன் கணவருக்கு உயிரும் உதவி, வசை நீங்கிப் புகழ் அடைவாய்' என்று வேண்டினான். கைகேயியோ இன்னும் பிடிவாதத்துடன் மன்னன் தனது வாக்குறுதியை மீறி உண்மையிலிருந்து விலகினால் அவருடைய சொல் பொய்யாதிருக்கும் பொருட்டு நான் எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டாள். வசிட்டனும் கைகேயியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இது முறையன்று என வலியுறுத்திக் கூறியும் அவள் கேட்கவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. உனது கணவன் உயிரைவிட்டு விடுவான் உலகம் ஏற்காது உன் மீது பழி வந்து சேரும் என எவ்வளவு எடுத்துக் கூறியும் நீ உணர மறுக்கிறாய். அதற்கு மேலும் நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது, நீ செய்வது முறையல்ல. 'கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும், பழி நின்று உயரும் எனவும் பாவம் உளதாம் எனவும், ஒழிகின்றிலை; அன்றியும் ஒன்று உணர்கின்றிலை, யான் இனிமேல் மொழிகின்றன என்? என்னா முனியும் முறையன்று என்றான்.” என்று முனிவர். எடுத்துக் கூறினார். தயரத மாமன்னன் துக்கம் தாளாமல் துவண்ட நிலையில் மரண வாக்குமூலமாகக் கைகேயியைக் கடிந்து கூறுகிறான்.