பக்கம்:கரிகால் வளவன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


காதலர் வந்திருந்தால் அவரை என்னிடம் கொடுத்துவிடு. காவிரியென்னும் காதலி நெடுக வந்து உன்னைத் தழுவிக் கொள்ளும் இந்த இடம் மிகப் புனிதமானது. இங்கே நின்று எத்தனை காலமானாலும் நான் தவம் செய்யக் காத்திருக்கிறேன். என் ஆருயிர்க் காதலரைக் கொண்டு வந்து கொடு, காவிரிக்கும் கடலரசனுக்கும் சேர்த்து விண்ணப்பம் செய்து கொள்கிறேன். எப்படியாவது என்னுடைய இன்னுயிர்க் கணவரைக் கொண்டு வந்து கொடுங்கள்!”

அவளுடைய அறியாமையை நினைந்து அருகில் உள்ளவர்கள் இரங்கினார்கள்.

ஆதிமந்தி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கடலை நோக்கி நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. கடலரசனுக்கு அருள் வந்தது.

ஏதோ ஒரு பொருள் கடலில் மிதப்பது போல இருந்தது. ஆடையும் தெரிந்தது. மனித உடல்போல் தோன்றியது. ஆட்கள் விரைந்து சென்று எடுத்தார்கள். ஆட்டனத்தியின் உடல்! ஆதிமந்தி அதை அணைத்துக் கொண்டாள். “உயிர் இருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

"ஐயோ பாவம் ஆசையைப் பார்!’ என்று அருகில் உள்ளவர் எண்ணினர்.

ஆனால் முயற்சி செய்வதில் தவறு இல்லையே! அத்தியை எடுத்துக்கறகறவென்று சுழற்றினார்கள். மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் ஒழுகியது. மெல்ல மூச்சு வருவது போலிருந்தது; எல்லோருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/102&oldid=1232521" இலிருந்து மீள்விக்கப்பட்டது