பக்கம்:கரிகால் வளவன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

முயற்சியால் காவிரி கரை பெற்றது: சோழ நாடு வளம் பெற்றது; தமிழ் கவிதை பெற்றது. அந்தக் கவிதைகளின் வாயிலாக இன்னும் கரிகாலனுடைய பெரும் புகழை நாம் அறிந்து வாழ்த்துகிறோம்.

கட்டுரைப் பயிற்சி

1. கரிகால் வளவன் பிறந்த வரலாற்றை எழுதுக.

2. கரிகாலன் என்ற பெயர் வரக் காரணம் யாது? நிகழ்ச்சியை விளக்குக.

3. கரிகாலன் முடிசூடியதற்குக் காரணமான நிகழ்ச்சியை வரைக.

4. வெண்ணிப்போரைப் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.

5. கரிகாலன் இமயத்தில் புலி பொறித்து வந்த வரலாறு யாது?

6. கரிகாலன் வேளாண்மையை எவ்வாறு பெருக்கினான்?

7. கரிகாலன் நீதியை நிலை நாட்டியது எப்படி?

8. பொருநராற்றுப் படையில் என்ன என்ன கூறப்படுகின்றன?

9. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி வரும் செய்திகள் எவை?

10. ஆதிமந்தியின் காதற் சிறப்பை விளக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/104&oldid=1205297" இலிருந்து மீள்விக்கப்பட்டது