பக்கம்:கரிகால் வளவன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

யாகும்'’—நல்ல பலன்களின் வரிசை நீண்டது. மூன்று நாழிகைக்குப் பின்பு பிறந்தால்தான் இந்த யோகம். அதற்கு முன்பு பிறந்து விட்டால் என்ன செய்வது? அவர் மனம் அடித்துக் கொண்டது. பஞ்சாங்கத்தைப் பார்ப்பார். உள்ளே போவார். பணிப் பெண்ணிடம், “எப்படி இருக்கிறது?” என்று கேட்பார்.

“மிகவும் வேதனைப் படுகிறார்கள்” என்பாள் அவள்.

“பிரசவம் ஆகிவிடுமா?” என்று கேட்பார்.

“அநேகமாக ஆகிவிடும் போல்தான் இருக்கிறது.”

“இன்னும் சில நாழிகை தாங்காதோ?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்பார்.

“இயற்கையை மாற்ற நாம் யார்?” என்பாள் பணிப் பெண்.

“சில நாழிகை பிரசவத்தைத் தாமதமாக்க வழி இல்லையா?” என்று கேட்பார்.

அவள் சிரிப்பாள். மிகச் சிறந்த மருத்துவப் பெண்ணை அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அப்போது அவருக்கு அந்த ஊரில் இருந்த பெரிய வைத்தியருடைய நினைவு வந்தது. ஆளை அனுப்பி அழைத்து வரச் செய்யலாம் என்றுகூட அவருக்குத் தோன்றவில்லை. திடீரென்று எழுந்து ஓடினார். சில கணத்தில் அவரை அழைத்து வந்துவிட்டார். அதற்குள் ஒரு நாழிகை கழிந்தது.

“மருத்துவ நூலில் எத்தனையோ அற்புதங்கள் உண்டென்று கேட்டிருக்கிறேன். நீங்கள் ஓர் அற்