பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I49

ராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ள டக்கிக் கொண்ட துரணாகக் கருதி முைறயிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான்.

“தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளி தாந் தலையா நிக்கனும், வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை முதிச்சிட்டு ஏணி, ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு.”

“அது சரித்தா? ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளி யளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன் கிட்ட பேச என்ன வக்கிருக்கு அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டி யிருக்கு அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள...’

அதுவும் நியாயம்.

படிப்பு இருக்கிறதா? இருந்தாலும் அறிவுக் கண்கள னைத்தையும் உப்பு உறிஞ்சிப் பீளை படரச் செய்து விடு கிறது. -

அப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். ‘வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்...” முகமே தெரியவில்லை. குரல்கள்தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக் கின்றன.

‘வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையா வது?” என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் ‘தப்பு தப்பு என்று அபராதம் வேண்டுகிறான். “வெடலப் புள்ளய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசி படி அஞ்சு ருவான்னு விக்கி, ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சி