பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 207

தொழிலாளியவை இதுவரைக்கும் ஒரு வேல நிறுத்தத்திலும் ஆரும் ஈடுபடுத்தல; நாம வேற பக்கம் அடிபிடின்னு நின்னு: போராடி பத்துப் பத்துப் பைசாவா கூலி கூட்டிட்டு வத் திருக்கும் அங்கேயும் அதுபோல இருக்கிற அளங்கள்ளதா தொழிலாளிய ஏமாத்தப்படுறாங்க. பச்சப் புள்ளியள ரெண்டு ருவாக் கூலி மூணு ருவாக் கூலின்னு ஆச காட்டி. அதுங்களுக்கு எதிர்காலம் இல்லாம அடிக்கியா. அவியளுக்குப் படிப்பு, அறிவு விருத்திக்குத் தொழில் பயிற்சி எதுக்கும் வாய்ப்பு இல்ல. இந்தத் தடவை நம்ம உப்புத் தொழிலாளிய, ஆலைத் தொழில் சட்டத்துக்குக் கொண்டு வாரனும். நம் ஒவ்வொருத்தரும் பதிவு பெற்ற தொழிலாளின்னு மாறனும் முப்பது வருசம் வேலை செஞ்சாலும் நம்ம பேரு அவங்க பேரேட்டில் இல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. முக்கியமா இதுக்கெல்லாம் போரா டனும்...”

ராமசாமி சொல்லிக்கொண்டே போகிறான்.

பொண்டுவல்லாம் எதெது சொல்லணுமோ சொல் லுங்கட்டி!’ என்ற செங்கமலத்தாச்சி, உள்ளே சென்று அந்த செல்ஃபில் வரிசை குலையாமல் வைத்திருக்கும் நோட்டுப் டத்தகங்களிலிருந்து ஒன்றை உருவிப் புரட்டிப் பார்க்கிறாள். அதில் அவன் பெயர் மட்டும்தான் எழுதி இருக்கிறான். உள்ளே தாளெல்லாம் . எங்களைப் பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்றுரைக்கின்றன. அவனுடைய பேனா.பேனா பேனா மாதிரி பென்சில்...

துளசி தட்டி வைக்கும் பொருள்கள், அதை எடுத்துக் கீறிப் பார்க்கிறாள். பிறகு அவற்றைக்கொண்டு வருகிறாள்.

“எல்லாம் கேட்டு ஒளுங்கா வரிசையr எளுதிக்கிங்க’

மரியானந்தம் அண்ணாச்சி காயிதமும் பேனாவும் கொண்டு வந்திருக்கானே? அதுக்குத்தானே அவெ வந்தது?