பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கரிப்பு மணிகள்

இறங்கியதும் இளந்தண்ணிர் பாய்ச்கம்படி பச்சையிடம் கூறிச் சென்றிருந்தார். உப்பு வாருவதற்கு இறங்கியிருக்கும்.

செந்தூர் முருகனை வாய்விட்டுக் கூவி அழைத்துவ ராக அவர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நடக்கிறார்.

வெகுநாட்கள் அவர் திருமணமே செய்து கொள்ள வில்லை. தாயார் மருமகளைப் பார்ககாமலே போகிறேனே என்று கண்களை மூடினாள். சிதம்பரவடிவு உறவுபெண் தான். செவந்திக்குத் கட்டி வைத்த மறுவருடத்திலேயே இவளை மகனுக்குக் கட்டி வைத்தார் தந்தை.

புருசன் சரியில்லாமல் செவந்தி அண்ணன் வீட்டுக்கு வந்தாலும் சோற்றுக்குப் பாரமாக இருக்கவில்லை. இட்லிக் கடை போட்டாள். பரவர் வீடுகள் எல்லாம் அவளுக்கு வாடிக்கை. பெட்டி முடைவாள், வலைகூடப் பின்னக் கற்றாள். கறுசுறுப்பும் கருத்தும் உடைய அவள் கையில் எப்போதும் காசு இருக்கும். அட்டியலும் கை வளையலும் மகளுக்கென்று வைத்திருந்தாள். புருசன் குடித்துவிட்டு வந்து நகையைக் கேட்டான் என்றுதானே அவள் புருச னையே வேண்டாம் என்று விலக்கிவிட்டு வந்தாள்?

உழைப்பின் காரணமோ, அவருடைய போதாத காலமோ, அவளுக்கு நீர் வியாதி வந்தது. இரண்டு மாதம் படுக்கையில் கிடந்துவிட்டுக் கண்ணை மூடிவிட்டாள். தன் பாட்டளத்தில் முழுக்கஞ்சி கூடக் குடிக்க முடியவில்லை. “கூட்டுறவு உப்புத் தொழிலாளர், உற்பத்தி விற்பனைச் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கவே பங்குகள் சேர்க்க வேண்டியிருந் தது. இப்போதும் அவர் பேரில் முக்கால் ஏக்கரி, செவந்ஓ பேரிலும் அவள் மகன் பச்சை பேரிலும் என்று மூன்று பங்கு...இரண்டேகால் ஏக்கரில் அவர் உப்பு விளை விக்கிறார்; அவளுடைய நகைகளை எல்லாம் விற்றுவிட வேண்டியதாகி விட்டது. சக்தி வேலுவுக்கு அரசு உபகாரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/61&oldid=657577" இலிருந்து மீள்விக்கப்பட்டது