பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கரிப்பு மணிகள்

எ ன் ப ைத இப் போது புரி ந் து .ெ கா ண் டி ரு க் கிறாள்.

எல்லை தெரியாமல் விரிந்து பரந்து கிடந்த பாத்தி. ளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பாட்டளத்தில் வேட்டி காயப் போட்டாற். போல், பாய்விரித்தாற்போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக் கும். இங்கோ.வானக்கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது: “தெப்பங்களே ஆத்தூர் ஏசிபோல் விரித்து கிடக்கின்றன?

வேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள் அவளைப் போல் ந்ாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கின்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு. --

உப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர் களில் லெ பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாசி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஜத்து பேருக்கு மேவில்லை. இவர்களைத் தவிர. தனிப் பட்ட முறையில் மாதச்சம்பளம் பெற்றுக்கொண்டு பணி சேய்யும் தொழிலாளிகளும் உண்டு. தம்பி பச்கைமுத்து வுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக் கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிர: வாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில் தான் எத்தனை சிறுவர் சிறுமியர்! பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சப்பன் தம்ப வில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அம்ை வைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி

  • தெப்பம்-கடல் நீரை முத்ன் முதலாகச் சேமிக்கும் பாத்தி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/65&oldid=657586" இலிருந்து மீள்விக்கப்பட்டது