உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருணாநிதி கருத்துரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 குக் குடிகாரப்பட்டம். அதே காரியத்தைப் பெரிய மனி" தர்கள் என்று பேசப்படுவோர் செய்தால் அது எஞ் சாய்மெண்ட். ஏழைகள்! காட்டில் திரியும் மிருகங்களுக்குக்கூட சந்தோஷ முண்டே! ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான் கள், பாடிப் பறக்கும் குயில்கள்—அவைகளை விடவா ஏழைகள் குறைந்துவிட்டார்கள்? • யாரால் முடியும் வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்? கொஞ்சு மொழியும் கோலாகாலமும் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் ஊமையாக முடங் கிக் கிடப்பதென்றால்...? காதல் கீதத்திற்கேற்ற இன்ப கேளிக்கை இளமை நாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்? எந்தப் பெண்ணால்தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை? ஏ பணமே ! பகல் இரவு என்று பாராது பாடுபட்டுப் பசி, பசி என்று கூறிடாத இரும்பு நெஞ்சினரின் இரும்பு பெட் டியில் தூங்கும் பணமே! குச்சு வீட்டில் ஏழை உண வின்றி ஓய்ந்துகிடக்கவும் மச்சு வீட்டில் பணக்காரர் கள் மதுரகீதம் பாடவும் பாழும் நிலையை உண்டாக்கிய பணமே! உலகத்தின் உயிரே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்தச் சோம்பேறிகளின் வீட்டில் வாழப் போகிறாய்? வரப்போகிறது பாட்டாளிகளின் படை யெடுப்பு! வந்து சேர்.