உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்தோவியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 நான் அவர்களுக்குச் சொல்வேன் சில இடங்களில் அரிசனத் தோழர்கள், சகோதரர்கள் வராமல் அந்த இடங்கள் நிறைவு செய்யாமல் இருக்கிற குறை இருக்க முடியுமே தவிர, வந்து அவர்களுக்கு இல்லை என்கிற குறை எங்குமே ஏற்பட்டது கிடையாது. சொல்லமுடியும். ர் உதாரணத்தை உங்களுக்குச் கடந்த நான்கைந்து ஆண்டுக் காலமாக, நம்முடைய தமிழ் மாநிலத்தில், குரூப்—1 சர்வீஸ் எழுதுகிறார்களே, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்ந்தெடுக்கிறதே, எப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு டெபுடி கலெக்டர் களாக, டெபுடி சூப்பரின்டெண்டுகளாக, அதில் ஜே. சி. டி.ஓ. க் களாக, டெபுடி ரிஜிஸ்டிரார்களாக, அஸிஸ்டெண்ட் கமாண் (எஸ்.ஏ.பி.) டிஸ்ட்ரிக்ட் ரிஜிஸ்டிரார்களாக எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் டண்ட்களாக யார் யார் தேர்ந்து பார்க்கவேண்டும். வகுப்புகளைப் பிரித்து நான் சொல்கிறேன் என்பதற் காக யாரும் ம் வருத்தப்படக்கூடாது, என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும், வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிற காரணத்தால், பிரிக்கப்பட்டால்தான் பின் தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று தெரியும் என்கிற காரணத் தால், நான் அதைச் சொல்ல வேண் ருக்கிறது. டியி கிட்டத்தட்ட 98 அல்லது 99 பேர்கள் 1967-லிருந்து இந்த ஆண்டு வரையில் சர்வீஸ் கமிஷனால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதித் திராவிடர்கள்- தாழ்த்தப்பட்டவர்கள்—டெபுடி கலெக்டர் வேலைக்கு 5 பேர், டெபுடி சூப்பரிண்டெண்ட் ஆப் போலீஸ் 4, ஜே.சி.டி. ஓ. 3, டெபுடி ரிஜிஸ்டிரார் 4, அஸிஸ்டெண்ட் கமாண்டண்ட் (எஸ். ஏ.பி) 1, டிஸ்டிரிக்ட் ரிஜிஸ்டிரார் 1, ஆக மொத்தம் 18 பேர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த 99 பேர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அடுத்து, கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்: டெபுடி கலெக்டர் 2, டி.எஸ்.பி. 1, ஜெ. சி. டி. ஓ. 1, டெபுடி ரிஜிஸ்டிரார் 1, (எஸ். ஏ. பி.) அஸிஸ்டெண்ட் கமாண் டண்ட் 1, ஆக மொத்தம் 6 பேர் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கருத்தோவியம்.pdf/13&oldid=1702903" இலிருந்து மீள்விக்கப்பட்டது