உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்தோவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள். உலகத் தமிழ் மாநாடு கண்டு, உலகத்து அறிஞர் பெரு மக்களை எல்லாம் அழைத்துத் தமிழின் ெ தான்மையை, பெருமையைப் பாரறியச் செய்தது. அண்ணா அவர்களது விருகம்பாக்கம் மாநாட்டினுடைய பேச்சின் எதிரொலி யாகும். தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிற்கும் தான் இடம், இந்திக்கு இடமில்லை என்று வரையறுத்துச் சொன்னது -- அண்ணா அவர்கள் வி ருகம்பாக்கம் மாநாட் டிலே ஆற்றிய உரையின் எதிரொலியாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய இராசராச சோழனுக்குச் சிலை- எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே அமைத்ததும், இளங்கோ அடிகளுக்கு-கரிகாலனுக்கு- கண்ணகிக்கு - தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை எடுப்பதுஎன்பது சாதாரணமாகப் பேசப்பட்டாலும், எத்தனையோ ஆண்டுக் காலமாக நடைபெறாத முயற்சியை, யாருக்கும் தோன்றாத அந்தக் கருத்தைத் தமிழக அரசின் துணையோடு இன்றைக்கு நாம் செய்திருக்கிறோம் என்றால். தமிழின்பால். தமிழ்ச் சான்றோர்களின் பால். தமிழ் வரலாற்றின்பால். இந்த அரசுக்கு இருக்கிற பற்றினை, பாசத்தினைக் காட்டு தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கருத்தோவியம்.pdf/9&oldid=1702899" இலிருந்து மீள்விக்கப்பட்டது