பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கருவில் வளரும் குழந்தை

குடத்தைச் சுற்றிலும் ஒரு சவ்வு உண்டு. அந்த சவ்வில் கருப்பையின் சுவரோடு சம்பந்தப்பட்டுள்ள பாகம் தடித்துக் கருக் குடையாக மாறுகிறது. இதன் மூலந்தான் தாயின் ரத்தக் குழாய்களுக்கும் கருவியின் ரத்தக் குழாய்களுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. தாயின் ரத்தத்திலுள்ள உணவையும், நீரையும் பிராண வாயுவையும் கருக்குடையிலுள்ள அணுக்கள் எடுத்து நஞ்சுக்கொடியிலுள்ள ரத்தக் குழாய்களின் மூலம் கருவிற்கு அனுப்புகின்றன.

சிறுநீர்ப்பை (Bladder)-மூத்திரம் சேரும்படியான பை.

சிறுநீர்ப் புறவழி (Urethra)-மூத்திரம் வெளிப்படுவதற்கு ஏற்பட்டுள்ள வழி. இதன் வழியாகவே விந்தணுக்களும் வெளியாகின்றன.

சுரப்பி—(Gland)

சூல்பை-(Ovary)-அண்டம் உண்டாகும் உறுப்பு.

சூழ்நிலை-(Environment)-வளர்க்கும் முறை, பயிற்சி, சொந்த அனுபவம், சூழ்ந்திருக்கும் நிலைமை முதலியவற்றைக் குறிக்கும் சொல். பொதுவாகக் கூறினால் பாரம்பரியம் அல்லாத மற்றவற்றையெல்லாம் இச்சொல்லால் குறிப்பிடலாம்.

நஞ்சுக் கொடி (Umbilical cord) -கருவைக் கருக்குடையுடன் சேர்ப்பது. இதன் மூலம் ரத்தக் குழாய்கள் செல்லுகின்றன.

பனிக் குடம் (Amnion)-இதற்குள்ளிருக்கும் நீரில் மிதந்துகொண்டுதான் கரு வளர்கின்றது.

பாரம்பரியம் (Heredity)-பிறவிலேயே அமையும் தன்மைகள், திறமைகள், உடற்கூறுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

பிராஸ்டேட் சுரப்பி(Prostate gland)-சிறுநீர்ப் பையின் அடிப்பாகத்திற்கருகில் அமைந்துள்ள ஒரு சுரப்பி. கலவியின் போது இதில் சுரக்கும் நீர்தான் சிறுநீர்ப் புறவழியின்வழியாக முதலில் சென்று யோனியில் சேர்கின்றது. அந்த நீர்தான் விந்தணுக்களுக்கு ஒரு தனி சக்தியை அளித்து முன் செல்லச் செய்கிறது.