பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

“எஸ். யூ ஆர் ரைட் !” என்று அங்கீகரித்தான் காளமேகம்.

இருவரும் சாப்பிட்டார்கள். வரால் மீன் வறுவல் நாவுக்கு உணக்கையாக இருந்தது. இயற்கையான ருசியுடன் இருந்தது. அந்நிய தேசங்களில் எல்லாமே செயற்கைப் பாடம் தானே ?...

காளமேகத்தின் தாய் ரொம்பவும் அன்புடன் உபசாரம் செய்தாள்.

ஒரு கொத்துச் சோறு கூடுதலாக உண்டான், ஞானபண்டிதன். அந்த அம்மணியைப் பார்த்த போது, அவனுக்குத் தன் அன்னையின் ஞாபகம் எழுந்தது. தான் பிறந்த சில மாதத்திலேயே தன்னை ஈன்ற தாய் விதி வழி ஏகிவிட்ட விதியின் விளையாட்டை அவன் எப்படி மறப்பான் ... ‘அப்பா எவ்வளவோ நல்லவங்க. தியாகி. எனக்காகத்தான் அவர் மறுமணம் செய்துகொள்ளவில்லை ... என்னை வளர்த்து ஆளாக்குவதிலேயே மன அமைதியும் தன்னிறைவும் பெற்று வந்திருக்கிறாரே !’...

காளமேகத்தின் அன்னையின் நெற்றிப்பொட்டு ஞானபண்டிதனை வழியனுப்பி வைத்தது. காளமேகம் ‘டாடா’ சொல்லி விடை கொடுத்தான்.

கார் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. தம்புச் செட்டித் தெருவின் வழியாக கார் வந்தது. வழியில் நடைபாதை வாசிகள் தெரு விளக்குகளின் ஒளியில் குடிசைகளின் உள்ளே முடங்கியிருந்துவிட்டு, மழை விட்டதும் நடைபாதைக்கு வந்து சாப்பாட்டுத் தட்டுக்களை மறுபடியும் பரப்பிக்கொண்டு சாப்பிடத் தொடங்கின நேரம் அது. காரை வேகமாகச் செலுத்தினான் அவன்.

மறுகணம், சடக்கென்று சேறு வாரி இறைக்கப்பட்ட சத்தம் கேட்கவே, பதட்டத்துடன் காரை நிறுத்தினான் ஞானபண்டிதன்.

அவனுக்குத் ‘திக்’கென்றது.

நடைபாதை வாசிகளின் சோற்றுத் தட்டுக்களிலே சேற்றுத் துளிகள் சிதறிவிட்டிருந்தன.

ஞானபண்டிதனின் விழிகள் நிரம்பிவிட்டன. இறங்கினான். “ஐயா, என்னை மன்னிச்சிடுங்க! ...நான் மன்னிப்புக் கேட்கிற